இந்திய சினிமாவில் ஜொலிக்கும் நமது நட்சத்திரம் இளைய கவி மரபுக் கவிஞன், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்


-மருதமுனை ஹரீஷா-

ஏஞ் சண்டாளனே ஏதோ ஆகுறனே
ஓங் கண்ணாலத்தான் தெனம் சாகுறனே
அடி சண்டாளியே மனம் திண்டாடுதே
ஒனக் கொண்டாடியே இப்ப பந்தாடுதே

கடப்பாறக் கண்ணால ஒரு போடு போட்டாயே
கருவாட்டுக் கொளம்போட சுடுசோறு சேத்தாயே
ஆடு போல மனசத் தின்ன ஓடுதே… ஓடுதே…
ஏஞ் சண்டாளனே…
என்று தொடங்கும் இந்தப்பாடல் இன்று எல்லோர் வாயும் முணு முணுக்கும் கிராமத்துப் பாடல் இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் நமது பொத்துவில் அஸ்மி அருமையான அழகான பாடல் வரிகள்.
பிரபு தேவா நடித்த ராசையா, விவேக் நடித்த ஷநான்தான் பாலா| ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கியுள்ள ஷகரிச்சான் குருவி| திரைப் படத்திற்காகத்தான் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இந்தப்பாடலை எழுதியுள்ளார்.

கரிச்சான் குருவி மிக விரைவில் வெளிவர உள்ள திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஒஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணி புரிந்த எத்தன் ஷஷஸ்ரோபரி|| போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தாஜ் நூர்தான் கரிச்சான் குருவி திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஷஷஏஞ் சண்டாளனே|| பாடல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாடல் என்பதால் இசை வெளியீட்டிற்கு முன்பாகவே இப்பாடலை வெளியிட்டுள்ளனர். வேல்முருகன், ஆழா ஆகியோர் தாஜ் நூரின் அற்புதமான இசையில் அஸ்மினின் தித்திக்கும் வரிகளை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளனர்.

பொத்துவில் அஸ்மின் மிகச் சிறந்ததொரு பாடலாசிரியராகத் திகழ்கின்றார். இவருடைய பாடல் வரிகளுக்கு உலகெங்கும் ரசிகர் கூட்டம்.
இலங்கையிலிருந்து இந்திய சினிமாவுக்கு பாடல் எழுதும் சாத்தியம் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு நமது இளைய கவி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினுக்குத்தான் வாய்த்திருக்கின்றது.
இந்த வாய்ப்பு விஜய் ஆண்டனியின் நான் திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பேயில்லை, சரியெல்லாம் சரியேயில்லை என்ற பாடல் வரிகளை எழுதியதன் மூலம் அவருக்குக் கிடைத்தது. என்றென்றும் அஸ்மின் விஜய் ஆண்டனியை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
விஜய் ஆண்டனியின் நான் திரைப்படத்தின் பாடல் ஆசிரியராக அறிமுகமான பாடல் ஆசிரியர் அஸ்மின் ஜிப்ரானின் இசையில் அமரகாவியம் படத்திற்காக எழுதிய ஷஷ;தாகம் தீர கானல் நீரைப் பாடலுக்காக ஒன்பதாவது எடிசன் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுப் பாடல் ஆசரியருக்கான விருதினைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதும் நமக்கெல்லாம் பெருமையான விஷயமுமாகும். அது மட்டுமன்ற இப்பாடல் வரிகள் கூட எல்லோர் வாயிலும் முணு முணுக்கின்ற வானொலி தொலைக் காட்சகளில் அடிக்கடி ஒலி ஒளி பரப்புகின்ற பாடலாகும்.

காதல் சுகுமாரின் இயக்கத்தில் ஸ்ரீறிகாந் தேவா இசையில் சும்மாவே ஆடுவோம் திரைப்படத்திற்காக பாடலாசிரியர் அஸ்மின் எழுதிய முத்து முத்துக் கருவாயா மிகப் பெரும் வெற்றிப்பாடலாக அமைந்திருந்தது. இது தவிர பாடலாசிரியர் அஸ்மின் அண்மையில் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்காக
அம்மா…! அம்மா…!
வானே இடிந்ததம்மா…
வாழ்வே முடிந்ததம்மா
தாயே எழுந்திடம்மா
தமிழ்நாடு அழுகுதம்மா
என்ற இரங்கல் பாடலை எழுதியிருந்தார்.

இசையமைப்பாளர் வர்ஷனின் இசையிலும் குரலிலும் வெளிவந்த பாடல் வரிகளின் ஊடாக உலகத் தமிழர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்து தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் அஸ்மின்.
அந்த இரங்கல் பாவால் ஈர்க்கப்பட்ட சசிகலா (அ.தி.மு.க. செயலாளர், தற்போதைய முதல்வர்) வர்ஷனையும் அஸ்மினையும் போயஸ் காடனுக்கு அழைத்து கௌரவப் படுத்தியமை ஊடகங்கள் வாயிலாக அறிந்த குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த இரங்கல் பாடலை பாடி அழுது முடிவதற்கிடையில் பாடலாசிரியர் அஸ்மின் இசையமைப்பாளர் வர்ஷ்சனின் இசையிலும் குரலிலும் உழவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் காய்ந்த ரொட்டியான பூமியையும்,ஈரமில்லாத வானத்தையும் வாடிவதங்கும் பயிர்களையும் பார்த்து வாடிக்கொண்டிருக்கும் ஏழை உழவர்களுக்காக
தாயினை மறந்த பிள்ளைகள் போல
உழவரை மறந்த பொங்கலிது
உழுதிட ஒரு துண்டு
நிலங்கூட இல்லை
உழவர்கள் எங்கடா பொங்குவது
ஏழைகள் என்றதும் ஏளனப்பேச்சு
எலிக்கறி சாப்பிடும் நிலைவரலாச்சு
என்ற பாடல் வரிகள் வலிநிறைந்த வரிகளாக ஏழை விவசாயிகளின் துயரை உலகத் தமிழர்களுக்கு உணர்த்தும் வகையில் உழவர்களின் நலனுக்கு குரல்கொடுக்கும் முகமாக தமிழ் பேசும் எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்த மிகச் சிறந்த பாடல் வரிகள்.

இது தவிர நமது பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் ஷஷஎந்த நேரத்திலும் நான்’திரைப்படத்திற்காக அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குநர் முத்துக்குமார் இயக்கியிருக்கின்றார்.

இத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எவரையும் நேரில் சந்திக்கவில்லை எனவும், தொலைபேசியில் கதைகேட்டு வட்சேப்பில் டியூன் கேட்டு மூன்று நாட்களுக்குள் எழுதி முடித்ததாகவும் இப்பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
தொடர்ச்சியாக முத்துக்குமாரின் அடுத்த படத்திலும் பாடலாசிரியர் அஸ்மீனே பாடல் எழுதவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பொத்துவில் அஸ்மின் சிறந்தவொரு கவிஞன் மரபுக் கவிதைகள் மருவிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மரபுக்கவிதைகளை சிறப்புமிக்கதாக எழுதும் ஒரு இளைய கவி.

அஸ்மினின் விடைதேடும் வினாக்கள் விடியலின் ராகங்கள், பாம்புகள் குளிக்கும் நதி என்பன கவிஞர் அஸ்மினின் வெளிவந்த கவிதைத் தொகுதிகளாகும். ஷஈழ நிலாவின் உணர்வுகள்| (பத்தி எழுத்து) ஷநிலவு உறங்கும் டயரி| (சிறுகதை) ஷதட்டாதே திறந்து கிடக்கிறது| (கவிதை) ஆகிய படைப்புக்கள் மிக விரைவில் வெளிவரவிருக்கின்றது.

வசந்தம் தொலைக்காட்சியின் ‘தூவானம்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளரான இவர் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டவர். வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம் நிகழ்ச்சிக்காக தேசய தொலைக்காட்சி விருதினை மூன்று தடவைகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் ஒன்றில் முகம் காட்டும் இவர் பற்றியும் இவருடைய பாடல் வரிகள் பற்றியும் கவிதைகள் பற்றியும்,நட்சத்திரங்கள் மெய்சிலிர்க்கப் பாராட்டுகின்றார்கள். அந்தவகையில் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடலாசரியர் அஸ்மினின் முத்து முத்துக் கருவாயா பாடலைப் பாடிய பின்னணிப் பாடகி நமீதா பாபு எனக்கு அஸ்மினோட பாடல் வரிகள் ரொம்பப் பிடிக்கும் அவர பாடலை ரொம்பவும் அனுபவிச்சுப் பாடினேன். அவருடைய பாடல்கள் எல்லாமே ஹிற்றான பாடல்கள் என்று குறிப்பிடுகின்றார்.

அதுபோலவே இந்தியப் பேராசிரியரும், பாடலாசிரியருமான சொற்கோ அவர்கள் அன்பால பாசத்தால் தகுதியால மிகுதியால நட்பால உலகமே பாராட்டுகின்ற அளவுக்கு அபாரமான திறமையுள்ளவர் அஸ்மின். பலர் தங்களைத் தாங்களே தகுதியானவர்களாக காட்டிக்கொள்கின்ற போது பிரமாண்டமான, அபாரமான மரபுக்கவிதை எழுதும் திறமை படைத்த அற்புதமான கிடைத்தற்கரிய வரம் இவர். கவிஞர்களிலெல்லாம் ஒரு வியப்புக்குரிய கவிஞர் இவர் உலகமே இவரைக் கொண்டாடனும். தமிழ் சிங்கத்தை ஒரு அண்ணனாகப் பாராட்டுகின்றேன் ஒரு மன்னனாக வருவாயென்று என்று வாயாற நெஞ்சாறப் பாராட்டி இருப்பது நமது கவிஞனுக்கு மட்டுமல்ல அது நமக்குக் கிடைத்த பாராட்டாகவே கருதவேண்டும்.

தன்னையொரு இலக்கிய விஞ்ஞானியாக காட்டிக்கொள்ள விரும்பாத இவர் தன்னைப்போலவே இந்திய சினிமாவில் பல படைப்பாளிகள் நமது நாட்டிலிருந்து பாட்டெழுத முன்வரவேண்டும் என்கிறார்.
இந்திய சினிமாவுக்கு இலங்கையிலிருந்து 50 வருடங்களுக்குப் பிறகு நான் பாட்டெழுத வந்திருக்கின்றேன். அதுபோல இல்லாமல் அந்த 50 வருட கால இடைவெளி இனிமேலும் வரக்கூடாது. நம் நாட்டில் பாட்டெழுதும் படைப்பாளிகள், கவிஞர்கள், திறமை படைத்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களும் பாட்டெழுத முன்வரவேண்டும். அவர்களுக்கான களம் காத்திருக்கின்றது என்றும் பெரும்மனங்கொண்டு பேசுகிறார் பாடலாசிரியர் அஸ்மின்.

மலேசியக் கவியரங்கு ஒன்றில் அஸ்மியினால் எழுது வாசிக்கப்பட்ட பொறுமை என்னும் கவிதை பலரது பாராட்டுக்களையும் பெற்ற உணர்வு பூர்வமான கவிதையாகும். உண்மையிலேயே அஸ்மின் என்னும் படைப்பாளி பாடலாசிரியர் நமக்குக் கிடைத்த ஒரு இலக்கிய வரம். அவருடைய கண்களிலே பல்லாயிரம் பாடல்கள் புறப்பட்டு நிற்பது புரிகிறது.

ஆழுமையும், பண்பாடும் மற்றவர்களை மதிக்கும் தன்மையும் நிறைந்த நமது அஸ்மின் இந்திய சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடலாசிரியர்கள் பாட்டெழுத போட்டி போட்டுக் கொண்டிருக்கும்பொழுது நம் குட்டித்தீவிலிருந்து கட்டித்தங்கமொன்று பாட்டெழுதுவது மிகப்பெரும் சவாலானதும் பெருமைப்படவேண்டிய விடயமுமாகும்.

பெயர் குறிப்பிடாத பல திரைப்படங்களுக்கு நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். அத்திரைப்படங்களும் மிக விரைவில் வெளிவரக் காத்திருக்கிறது. சொற்புதையல் நிறைந்த பாடலாசிரியர் அஸ்மின் மிக வேகமாக பாட்டெழுதும் திறமைகொண்டிருக்கின்றார். பல இயக்குநர்கள் அவரிடம் பாட்டெழுத கதைசொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்துவரும் ஒரு இளம் ராசியான பாடலாசிரியராக இவர் கருதப்படுகிறார்.
இசைஞானி இளையராஜா மற்றும் ஒஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசையிலும் தன்னுடைய பாடல் வரிகள் ஒலிக்க வேண்டும் என்பது இவரது ஆசை. அந்த எண்ணமும் ஆசையும் மிக விரைவில் இவருக்கு சாத்தியமாகும். தொடர்ந்தும் இவர் பாட்டெழுத வேண்டும் இவருடைய வரிகள் அழகும் அற்புதமும் நிறைந்தவை. திரும்பித் திரும்பி கேட்கத்தூண்டும் வரிகள். வாழ்த்துக்கள் அஸ்மின் இளையகவி, இனிய கவிஞன் இனியவனின் பாடல்கள் தொடர்ந்தும் ஒலிக்கட்டும் இந்த நட்சத்திரம் ஜொலிக்கட்டும்..