குமாரி கூரே விவகாரம் சம்பந்தமாக ஜம்மியதுல் உலமாவினால் ஹக்கீம் விசாரிக்கப்பட்டிருந்தார்

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 10)

சமூகத்தின் பிடிசாபம்

(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)

இறுதிப்பகுதி:

தனக்கு இனி இந்த உலகில் எதுவும் மீதியில்லை என்று குமாரி முடிவு செய்துகொண்டார்.தன்னை ஹக்கீமால் திருமணம் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.ஹக்கீமின் அந்தப்புரத்தில் தானும் ஒருத்தியேயன்றி தனக்கென்றொரு தனியான இடம் எதுவும் ஹக்கீமிடம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.ஹக்கீமிற்காக எல்லாவற்றையும் இழந்ததன் பின்னர் இனி இந்த உலகில் தனக்கு எதுவும் எஞ்சி இல்லை என்றவுடன் குமாரி இந்த உலகைவிட்டு விடைபெற முடிவு செய்தார்.

2004 09 23ம் திகதிக்குப் பின்னர் ஹக்கீமுடனனான பாலியல் தொடர்பை நிறுத்திக்கொண்டார்.அதன் பின்னர் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார். ஒரு முறை விஷம் அருந்தி ரத்த வாந்தியும் எடுத்திருந்தார்.
இவ்வாறு நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கையில் 2005 ஆகஸ்ட் 05ம் திகதி கொல்லுபிடியில் இருக்கும் குமாரியின் வீட்டிற்கு ஹக்கீம் குடிபோதையில் சென்றார்.குமாரியைப் படுக்கைக்கு அழைத்தபோது குமாரி மறுத்துவிட்டார்.அதனால் கோபம் கொண்ட ஹக்கீம் குமாரியை அடித்துவிட்டார்.

நிலைமை மோசமாவதைக் கண்டு குமாரி போலீசில் சென்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார். ஹக்கீம் தன்னைப் படுக்கைக்கு அழைத்து மறுத்ததால் தனக்கு அடித்ததாக அந்த முறைப்பாட்டில் சொல்லியிருந்தார். குமாரி இறந்ததன் பின்னர் கொல்லுப்பிட்டி பொலீஸ் அதிகாரி சிறிவர்தன அதனைக் குறிப்பிட்டிருந்தார். (பார்க்க இணைப்பு 01)

அன்று திகதி 2005 ஒக்டோபர் 05.ரமழான் மாதம்.ஹக்கீம் போதையில் இருந்தார்.அன்றிரவு தொலைக்காட்சியொன்றில் செய்திக்குப் பிறகு அவர் பேட்டி கொடுப்பதாக இருந்தது.ஆனால் அந்தப் பேட்டி சரியான நேரத்தில் நடைபெறவில்லை.பத்து நிமிடம் தாமதித்தே நடந்தது.காரணம் போதையில் இருந்தவரை தெளியவைத்துப் பேட்டிக்கு அனுப்புவதற்குத் தாமதமாகிவிட்டது. ஹக்கீம் வரும்வரைக்கும் தொலைக்காட்சியின் திரை பேட்டி நேரத்தில் வெறுமனே ஸ்தம்பிதமாகி நின்றிருந்ததை அந்தப் பேட்டியைப் பார்ப்பவர் இதனை அவதானிக்கலாம்.

அன்று ஹக்கீமின் கார்னிவல் இல்லத்தில் பட்டாணி மகேந்திரன் என்பவர் பாதுகாப்பு கடமையில் இருந்தார்.நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
குமாரி ஹக்கீமின் வீட்டடிக்கு வந்தார்.தான் ஹக்கீமைச் சந்திக்கவேண்டும் என்றும் தன்னை உள்ளே விடுமாறும் வேண்டினார்.அனுமதி மறுக்கப்பட்டவுடன் சிறிது நேரம் சத்தம் போட்டுக் கத்த ஆரம்பித்தார்.ஹக்கீமுக்கு நல்லொரு பாடம் படிப்பிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அதிகாலை சுமார் 3 மணியிருக்கும்.கார்னிவல் இல்லத்திற்கு ஒரு ஆட்டோ வந்துநின்றது. அந்த ஆட்டோவை சரத்சிறி குமார என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அதிலிருந்து இறங்கிய குமாரி கதவைத் திறக்குமாறு மீண்டும் வேண்டினார்.கதவு திறக்கவில்லை.ஆட்டோவிலிருந்து ஒரு கலனை எடுத்து வந்தார்.அதற்குள் பெற்றோல் இருந்தது.தன்மீது பெற்றோலை ஊற்றிவிட்டு நெருப்பெட்டியை எடுத்தார்.கதவைத் திறக்காவிட்டால் நெருப்பைப் பற்றவைப்பதாக மிரட்டினார்.கதவு திறக்கப்படவில்லை. பற்றவைத்தார்.அவருடம்பில் நெருப்பு குபு குபு என்று எரிந்தது.பாதுகாவலர்கள் தண்ணீரைக் கொண்டுவர ஓடினார்கள்.கருகிய உடம்போடு கொஞ்சநேரம் ஓடிவிட்டு குமாரி கீழே சரிந்தார்.

சர்ஜன் உபாலி தண்ணீர் கொண்டு வந்த ஊற்றினார். வைத்தியசாலைக்கு குமாரியை அம்புலன்ஸில் அவசரமாக எடுத்துச் சென்றார்கள்.குமாரி இறக்கும்போது மாலை 4.30 மணியிருக்கும். மருத்துவமனையில் ‘மம ஹகீம்ட ஹுகாக் ஆதரய்’ (நான் ஹக்கீமை அதிகமாக நேசிக்கிறேன்) என்று மரணத்தறுவாயில் குமாரி கூறியதாக அன்றைய காலப்பகுதியில் வெளிவந்த தினகரன் பத்திரிகை கூறியிருந்தது.(பார்க்க.இணைப்பு 2 மற்றும் 3) குமாரியின் மருத்துவ அறிக்கையை வைத்தியர் ஹதுன் ஜயவர்த்தன சமர்ப்பித்தார்.அதனை அடிப்படையாக வைத்து கொழும்பு மாநகர பிரேத பரிசோதனை அதிகாரி எட்வார்ட் அஹங்கம இது தற்கொலைதான் என்று நீதிமன்றத்திற்கு வாக்கு மூலம் கொடுத்தார்.குமாரி கூரேயின் விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு கையளிக்குமாறு கொல்லுபிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி சிறிவர்தனவிற்கு பணித்தார்.குமாரியின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் இருக்கின்றன.இந்தத் தொடரின் நோக்கம் அதுவில்லை என்பதால் கடந்து செல்வோம்.

இதுதான் குமாரி கூரே என்ற ஒரு அப்பாவிப்பெண்ணின் கதை.எங்கள் அரசியல் தலைவரால் அநியாயமாக ஏமாற்றப்பட்ட பெண்ணின் கதை.அன்று ஹக்கீமிற்குப் பிடித்த சனி இன்று வரைக்கும் ஓயவில்லை. அன்றிலிருந்து அவரின் அரசியல் நகர்வுகளை எல்லாம் இந்த விவகாரமும் இதைப் போன்ற இன்னும் சிலதும்தான் தீர்மானித்திருக்கின்றன.வாக்குப்போட்ட நாம் அல்ல.இரவு பகலாக கட்சி வளர்தவர்கள் அல்ல.முஸ்லீம் காங்கிறசை ஒரு காபிர் பெண் தீர்மானித்திருக்கிறாள்.ஹக்கீமின் கையில் கட்சியைக் கொடுத்ததால் வந்த வினை இது.
குமாரி கூரேயின் விவகாரத்தை வைத்து ஹக்கீம் நன்றாக மிரட்டப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது..வேறுவழியில்லாமல் முஸ்லீம்களின் அரசியல் அபிலாஷைகளை விற்று ஹக்கீம் தன்னைக் காத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்று புரிகிறது.எப்படி என்று பார்ப்போம்.

ஹக்கீமின் 3 பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமான பைல்களை மஹிந்த வைத்துக்கொண்டிருந்தார்..
ஒன்று பொருளாதார நிர்வாக சட்ட ஒழுங்கு முறைகளை மீறி ஒரு முஸ்லீம் வியாபாரியிடமிருந்து கப்பலொன்றை வாங்கியமை.இரண்டாவது மாணவர்களை சட்டக்கல்லூரிக்கு அனுபதிப்பதற்காக அவர்களிடமிருந்து பத்து லட்சம் ரூபாவை அவருடைய இணைப்புச் செயலாளர் ஹசன் பாயிஸ் என்பவரினூடாக பெற்றுக்கொண்டமை.அதற்காக 9 பக்கங்கள் கொண்ட வாக்குமூலங்கள் பதியப்பட்டிருந்தன.மூன்றாவது குமாரி கூரேயின் விவகாரம் சம்பந்தமாக 16 வாக்குமூலங்கள்,மற்றும் வீடியோக்கள் அடங்கிய பைல்.இது தவிர இரண்டு கற்பழிப்புக் குற்றங்கள் சம்பந்தமான பைல்.(பார்க்க.இணைப்பு 4 மற்றும் 5)
இவற்றை வைத்துத்தான் மஹிந்த ஹக்கீமை ஆட்டிப்படைத்திருக்கிறார். ஹக்கீமின் இந்த விவகாரத்தைக் கையாள பிரதான பொலீஸ் அதிகாரி இந்துனில் மேற்பார்வையின் கீழ் சர்ஜன் பண்டார என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த பைல்கள் வெளியே வந்துவிடும் என்ற பயத்தினால்தான் ஹக்கீம் அவர்கள் மஹிந்தவின் காலோடு ஒட்டிக்கிடந்தார்.இறுதி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை விட்டு வரமுடியாது என்று ஒற்றைக்காலில் நின்றவர் ஹக்கீம்.ஹசனலி சென்றுவிடுவார்,ரிஷாட் ஏற்கனவே சென்றுவிட்டார் என்ற நிலையில்தான் வேறுவழியின்றி ஹக்கீம் மைத்திரியோடு இணைந்துகொண்டார் என்பதே திரைக்குப் பின்னால் நடந்த உண்மைகள்.

அது மட்டுமல்ல அன்றே குமாரி கூரே விவகாரம் சம்பந்தமாக ஜம்மியதுல் உலமாவினால் ஹக்கீம் விசாரிக்கப்பட்டிருந்தார்.அந்த விசாரணையின் போது ஜம்மியதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி,அன்றைய செயலாளர்,மு.காவின் ஷூரா சபை உறுப்பினர் கலீல் மௌலவி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீன்,மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் என்போரின் முன்னிலையில் ஹக்கீம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அதற்கான உத்தியோக பூர்வ ஆவணமும் ஜம்மியதுல் உலமாவில் இருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது.ஹக்கீம் குற்றத்தை ஒப்புக்கொண்டவுடன் ஏன் ஜம்மியதுல் உலமா அவரை பதவியை விட்டு ராஜனாமாச் செய்யச் சொல்லவில்லை என்பது இன்னும் புரியவில்லை.

அது மட்டுமல்லாது இறுதியாக நடந்த கட்டாய உயர் பீடக்கூட்டத்திலும் ஹக்கீம் தனக்கும் குமாரிக்கும் இடையில் இருந்த தொடர்பை ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது மேலதிகமான தகவல்.

ஏன் இத்தனை தூரம் பலவருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விவகாரத்தை பகுதி பகுதியாக நான் எழுதவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். குமாரிக்கூரேயின் விவகாரம் மட்டும்தான் ஹக்கீம் செய்த தவறு அல்ல.இதைப் போல பல விவகாரங்கள் இருக்கின்றன. நான் இன்னம் எழுதினால் திருமணம் முடிக்காத பல பெண்களின் வாழ்க்கைகள் அம்பலமாகிவிடும். அப்பெண்கள் தனிமனிதர்கள் என்பதால் அதனை நான் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதனால் இத்தோடு நிறுத்திக்கொள்ள நினைக்கிறேன்.

எனது நோக்கம் ஹக்கீம் அரசியலுக்கு சரியில்லை என்பதை மூன்று வகையான கோணங்களில் நிரூபிப்பது.

முதலாவது அவர் அகீதா ரீதியாக சரியில்லை என்பது,

இரண்டாவது அவர் ஒழுக்க ரீதியாக சரியில்லை என்பது,

மூன்றாவது அவர் அரசியல் ரீதியாக சரியில்லை என்பது.

ஹக்கீம் ஒழுக்க ரீதியாக சரியில்லை என்பதும்,அது எமது அரசியலை எவ்வாறு பாதித்தது என்பதையும் நான் இதுவரைக்கும் ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறேன். எனது அடுத்த பதிவு ஹக்கீம் அகீதா ரீதியாக இஸ்லாத்தை விட்டு வெளியேறும் குற்றத்தை இழைத்திருக்கிறார் என்பதை நிரூபிப்பதாக இருக்கும். அதற்கு அடுத்தது அவரின் அரசியல் தவறுகளை வீடியோ வடிவில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.

நான் ஒரு வார்த்தையில் குமாரி கூரேயின் விவகாரத்தை எழுதி முடித்திருக்கலாம்.ஆனால் எமது மக்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள்.இன்னும் எமது மக்கள் ஹக்கீமை ஒரு அவ்லியாவின் தரத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக எமது பெண்கள்
.ஹக்கீம் ஒரு உத்தம புத்திரன்,அவர் முஸ்லீம்களுக்காக பாடுபடுகிறார் என்று இன்னமும் அரசியலைப் புரியாமல் கண்மூடிகளாக நம்பியிருக்கும் மக்களுக்கு ஒரு வார்த்தையில் இவைகளைச் சொன்னால் சொல்பவனைப் பைத்தியம் என்பார்கள்.நான் எடுத்த இந்த முயற்சி, ‘’இல்லை.உங்கள் தலைவர் நீங்கள் நினைப்பது மாதிரி நல்லவர் இல்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான்.

இந்தத் தொடர் மூலம் ஹக்கீமை வீழ்த்த முடியாது.ஆனால் இத்தொடரால் அந்த மலையில் மிகப்பெரிய வெடிப்பு விழுந்திருக்கின்றது.அதை முகநூலில் உணர முடிகிறது. நாளை அந்த வெடிப்பு இன்னும் பெரிதாகும்.உண்மைகளை நாம் மெதுவாக உரக்கச் சொல்லும்போது அந்த மலை சுக்குநூறாகச் சிதறிவிடும்.அது மெதுமெதுவாக நடக்கும்.பொறுத்திருந்து பார்ப்போம்.இன்ஷா அல்லாஹ்.

முகநூலும்,இணையமும் எமது முழு சமூகத்தையும் பிரதி நிதித்துவப்படுத்தாது. ஆனால் எமது சமூகத்தின் பெரும்பாலான இளைஞர்களை முகநூல் பிரதிநிதிதுவப்படுத்துகிறது. என்னோடு தொடர்புகொள்ளும் பல இளைஞர்களின் உணர்வுகளையும், ஆதங்கங்களையும், வரவேற்பையும்,ஆதரவையும் நான் கண்ணீரோடு ஆகார்ஷிக்கிறேன்.

இது முகநூலோடு நின்றுவிடக்கூடாது.இதனை வாக்களர் மட்டத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு விபச்சாரன்,அதுவும் வயது முதிர்ந்த விபச்சாரன்,தான் செய்த விபச்சாரத்தால் இணைவைப்பு வரைக்கும் சென்ற ஒரு மனிதன்,ஒரு அந்நியப் பெண்ணுடன் விபச்சாரம் செய்த மனிதன்,அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த மனிதன்,அவனது காமத்தால் எமது சமூகத்தை அந்நியனின் காலடியில் கட்டிவிட்ட மனிதன் தான் இன்று முஸ்லீம் காங்கிறஸ் எனும் மாபெரும் கட்சியின் தலைவனாக இருக்கிறான்.தனக்குள் இருக்கும் அனைத்து அசிங்கங்களையும் மூடி மறைத்துக் கொண்டு கிழக்குப் பக்கம் வரும்போது ஒரு புன்னகையை அணிந்து கொண்டு வருகிறான்.நஹுமதுஹு வனுசல்லி அலா ரசூலிஹில் கரீம் என்று ஆரம்பிக்கிறான்.நாம் மயங்கிவிடுகிறோம். அவன் மாய வலையில் வீழ்ந்து விடுகிறோம்.இதனை எமது தாய்மார்களுக்கும்,படிக்காத மக்களுக்கும் புரியவைக்கவேண்டும்.அதற்கான அடுத்த முயற்சியில் நாம் இறங்க வேண்டும்.

முடியுமானவர்கள் இதனை பள்ளிவாசல்களின் பகிருங்கள்.மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.எமது பெண்களிடம் விளங்கப்படுத்துங்கள்.இது மட்டுமல்ல.இது போல் பல இருக்கின்றன என்று சொல்லுங்கள்.இதன் ஓடியோ வடிவம் தயாராகிவிட்டது,அதனை வட்ஸப்புகளில் பரப்புங்கள்.

ஒரு சுயாதீனமான இளைஞர் படையொன்றை நாம் உருவாக்க வேண்டும்.அது ஹக்கீமுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவேண்டும்.அவர் எம்மைத் தலைமை தாங்குவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒருவர் என்பதை நாம் எடுத்துச் சொல்லவேண்டும்.இதனை அரசியலில் உள்ளவர்கள் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அரசியலுக்கு வெளியே இருக்கும் சமூக நலன் கொண்ட இளைஞர்கள்தான் இதனை முன் நின்று செய்யவேண்டும்.நாளை அநியாயக்கார ஆட்சியாளனை அடக்குவதற்கு சக்தி இருந்தும் அமைதியாக இருந்ததற்காக அல்லாஹ்வின் தண்டனை இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.ஹக்கீமை தலைவராக ஏற்றதற்காக நான் எனது இறைவனிடம் தண்டனை அனுபவிக்கத் தயாரில்லை.நீங்கள் தயாரா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

குமாரி கூரேயின் விவகாரத்தால் ஒரு நன்மை நிகழ்ந்திருக்கிறது.எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள். அரசியல் அவதானம் ஒன்று உதித்திருக்கிறது.எந்த சமூகத்தில் இளைஞர்கள் விழித்துக்கொள்கிறார்களோ அந்த சமூகத்தில் அநீதியான அரசியல்வாதிகள் அழிந்துவிடுவார்கள். ஹக்கீமின் அழிவு ஆரம்பித்துவிட்டது.

அல்லாஹ் எமது சமூகத்திற்கு ஒரு அழகான அரசியல் விடுதலையத் தருவானாக.
முடிந்தது. இனித் தொடரும்….

RAAZI MUHAMMATH JAABIR