அக்கரைப்பற்று அல் ராஷித் பஸ் மீது தாக்குதல், தூக்கத்தில் இருந்த பயணிகள் அல்லோலகல்லோலம்

நேற்றிரவு 09 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அக்கறைப்பற்றை நோக்கி பயணித்த AL RASHITH (அல் ராஷித்) பஸ் வண்டி இன்று அதி காலை 04.00 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் வைத்து கல்லெறி தாக்குதலுக்குள்ளானது .

இத் தாக்குதலினால் இடது பக்க இரண்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. கல்வீச்சுக் காரணமாக பாரிய சத்தத்துடன் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதனால் பயணிகளில் சிலர் சிறு காயங்களுக்குள்ளாகினர்.

இந்த பஸ்ஸில் ஆண், பெண், சிறுவர்கள் ,கைக் குழந்தைகள் எனப் பலரும் இருந்ததனால் பீதியுடன் கலவரம் அடைந்தனர் .

அக்கரைப்பற்று மட்டக்களப்பு ஊடாக கொழும்பு இரு வழிப் பாதை பயணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தீவீர தொழில் போட்டியினால் பயணிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது  .

தொடர்ச்சியாக நடை பெற்றுவரும் இத் தாக்குதல்களினால் அச்சமடைந்துள்ள பொது மக்கள் இப் பாதையூடாக பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர் .

பஸ்கள் எந்த வகையிலாவது பாதிக்கப்படும் போது பஸ் உரிமையாளர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் நஷ்ட்ட ஈடு கிடைக்கும் ஆனால் பாதிக்கப்படும் பொது  மக்களுக்கு எவ் வித நஷ்ட்ட ஈடும் கிடைப்பதில்லை என்பது கவலைக்குரிய விடயம் .

மத்திய போக்குவரத்து , மாகாண போக்குவரத்து அதிகார சபைகள் ஊடாக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான விபத்து காப்பீடுகள் தொடர்பாக நஷ்ட்ட ஈடுகள் ஏதும் இருப்பின் அது பற்றி பேரூந்துகளில் தகவல்களை வெளியிட வேண்டுமென்று பிரயாணிகள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

இச் செய்தி தொடர்பாக கடந்த மாதம் அட்டாளைச்சேனை BMC யில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்தினையும் இங்கு பதிவிட்டுளோம் .

(வீடியோ உதவி – சிலோன் முஸ்லீம் )