பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் றிசாத்

ஊடகப்பிரிவு

பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலண்டனில் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் அங்குரார்ப்பண மாநாடு லான்செஸ்டர் ஹவுஸில் ஆரம்பமான போது இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்ற கைத்தொழிம் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட்டுடன் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்த மாநாட்டில் இணைந்துகொண்டார்.

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் பல்வேறு வழிகளிலும் உதவியளிப்பதை விஸ்தரிக்குமாறும் அமைச்சர் வேண்டிக் கொண்டார்.

”பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லாண்ட் (Rt Hon Patricia Scotland) அவர்களுடனான தங்களது சந்திப்பு  மகிழ்ச்சியளிக்கின்றது” என்று அமைச்சர் ரிஷாட் இன்று காலை தொலைபேசியில் தெரிவித்தார்.

அமைச்சர் இந்த மாநாட்டில் உரையாற்றிய போது கூறியதாவது,

சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கை சாதகமான உதவிகளைப் பெற்று வருகின்றது. பொதுநலவாய நிலைப்பாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட உறவுகள் இருக்கின்றன. தற்போது இலண்டனில் நடைபெறும் நிகழ்வு அதற்கு முன்னோடியாக விளங்குவதுடன் இலங்கையின் வர்த்தகம் தலைத்தோங்குவதற்கும் உதவுமென நம்புகின்றேன்.

விஷேடமாக ”வளர்ச்சிப்பாதையிலான நிகழ்ச்சி நிரல்” என்ற இந்த மாநாட்டின் எண்ணக்கரு எங்களது தேசிய அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு நோக்கிற்கு உதவியாக அமையும்.

அத்துடன் வர்த்தக முன்னேற்றம் முதலீடு மற்றும் தொழில் உருவாக்கத்திற்கும் இதன் பங்களிப்பு உதவுமென நான் நம்புகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பொதுநலவாய செயலாளர் நாயகத்துக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையுடனான் பொதுநலவாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இலங்கையின் பங்களிப்பு தொடர்பில் பொதுநலவாய செயலாளர் நாயகம் நன்றி தெரிவித்ததுடன் தொழினுட்ப உதவிகளை செயலகம் வழங்குமென உறுதியளித்ததுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

சுதந்திர வர்த்தக உடன்பாட்டுப் பேச்சு வார்த்தைகள் ஏற்றுமதி மூலோபாய கருத்தாடல் திட்டங்களை வடிவமைப்பு தொடர்பிலும் இந்த தொழிநுட்ப உதவிகள் அடங்குமெனவும் ஏற்றுமதி, இறக்குமதி வங்கிகளை அமைப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.