முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஸீர் சேகு தாவூத் தன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் மீது பல குற்றங்களையும், சந்தேகங்களையும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி குற்றம் சாட்டினார். இவைகளை விசாரிக்க வேறு ஒரு குழுவை நியமித்து விசாரிக்காமல் தானே சர்வாதிகாரம் செலுத்தி உயர்பீட உறுப்பினர்களிடம் பெயரை கூறி கை உயர்த்த பணித்து ஏகமனதான முடிவு என கூறி இடைநிறுத்தினார் ஹக்கீம்.
ஆனால் இவ்விடத்தில் (மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் தன்மீது மையோன் முஸ்தபா குற்றம் சுமத்திய போது இவ் குற்றத்துக்கு நான் தீர்ப்பளிக்க முடியாது என்று தன் இருக்கையைவிட்டு எழுந்து வெளியில் சென்று தீர்ப்பளிக்க சொன்னார் இதுதான் தலைமை என்பதையும் நாம் நினைவு படுத்துகிறோம்.)
இர்பான் முகைதீன்