எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுக்கு சொகுசு வாகனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சுமந்திரன் முன்வைத்திருந்ததாக மாணவன் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பா.உ சுமந்திரன் பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அமைந்துள்ள சுமந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அந்த மாணவன் என்மீது வைக்கும் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது, நான் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களை சம்பந்தன் ஐயாவுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருடைய நிலையை காட்ட வேண்டும்.
விவாதத்தில் பேசும் அளவுக்கு வதந்திகள் பரப்பப்படுகின்றன, இளைஞர்கள் வாழ வேண்டும் அதற்கான வழிகளை நாம் உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கோபம் வந்து விட்டது என்பதற்காக நாமே எம்மை தண்டிக்கக்கூடாது. எமது மூக்கை நாமே வெட்டிக்கொள்ளக் கூடாது. கோபம் வந்தால் நிதானமாக செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.