அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மாகாண அமைச்சரின் ஆதரவாளர்களால் தடுத்து வைப்பு

நாளை அட்டாளைச்சேனை பிரதேச செயலக திறப்பு விழாவுக்கான விருந்தினர் அழைப்பிதழிலும் , கல்வெட்டிலும் தனது பெயர் பொறிக்கப்படவில்லை எனும் காரணத்தினால் பிரதேச மாகாண அமைச்சர் ஒருவரும் அவரின் ஆதரவாளர்களும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சென்று திறப்பு விழாவை பிற் போடுமாறு  கூறி  பிரதேச செயலாளரையும் , உதவி பிரதேச செயலாளரையும் அழைத்து சென்று தடுத்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .


 குறித்த அழைப்பிதழில் மாவட்ட  அபிவிருத்தி தலைவர்களான அமைச்சர் தயாகமகே , பிரதி அமைச்சர் பைசல் காசிம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர் கட்சித் தலைவர் MS. உதுமாலெப்பை ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்