குமாரியை வைத்து மறுநாள் பாராளுமன்றத்தில் நடாத்தப்படவிருந்த நாடகம் என்ன?

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 5)
==================
ஆடுகளம்
***************

(இந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் எந்த அரசியல் வாதியும் இதில் சொல்லப்பட்டிருப்பவை பொய் என்றால் எனக்கெதிராக மான நஷ்ட வழக்குத் தொடரலாம்)

ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)
*****
‘’நான் எதற்காக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும்?’’ குமாரி வினவினார்.

‘’இன்றிரவு(2004.04.21) துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர உன்னைத் தொடர்பு கொள்வார்.நீ அவரோடு விபரமாகப் பேசிக்கொள்ளலாம்’’ என்று விளக்கினார் ரிஷாட்.

மங்கள சமரவீர தொடர்பு கொண்டபோது இந்த அரசியலில் சுழியில் தானும்,தான் ஒருவர் மேல் வைத்த காதலும் பாவிக்கப்படுகிறது என்று தெரியாத அந்த அப்பாவிப்பெண் ‘நான் ஏன் நாளை பாராளுமன்றத்திற்கு வரவேண்டும்’ என்று மங்களவை வினவினாள்.

‘நீ என்ன செய்ய வேண்டும் என்று நாளை பாராளுமன்றம் செல்லும் வழியில் சொல்கிறேன்.நாளை காலை 6.30 மணிக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறிபதி சூரியாராச்சியின் வாகனம் உன்னை ஏற்ற வரும்.சாறி அணிந்து கொண்டு தயாராக இரு’’ மங்கள கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.

குமாரியை வைத்து மறுநாள் பாராளுமன்றத்தில் நடாத்தப்படவிருந்த நாடகம் என்ன?

மறுநாள் அதாவது 2004.04.22ம் திகதி சபாநாயகருக்கான தெரிவு நடைபெறவிருந்தது.ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் சுதந்திரக்கூட்டணியின் வேட்பாளரான டி.ஈ.டபுள்யூ குனசேகரவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற வெறியில் இருந்தார் என நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.குமாரி கூரேயை வைத்து குமாரிக்கும் ஹக்கீமுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பற்றி எழுதிய கடிதத்தை ஹக்கீம் அவர்களிடம் கொடுத்து அவரை சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதுதான் அந்தத் திட்டம்.குமாரியைப் பாராளுமன்றத்தில் காணும் வரைக்கும் ஹக்கீம் இவை எதனையும் அறிந்திருக்கவில்லை.

அடுத்த நாள் காலை கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ வாகனத்தில் கோட்டேயில் இருக்கும் மங்கள சமரவீரவின் வீட்டிற்கு குமாரி அழைத்துச் செல்லப்பட்டார்.
கடிதத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்களா என மங்கள வினவியதற்கு குமாரி தலையசைத்தார்.எல்லோரும் பாராளுமன்றத்திற்கு செல்ல தயாரானார்கள்.
பாராளுமன்றத்தில் சக்தி மற்றும் ஆற்றல் வளப் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,சிறிபதி சூரியாராச்சி, மங்கள் சமரவீரவின் உதவியாளரான றுவன் பேர்டினாண்டஸிடம் குமாரி ஒப்படைக்கப்பட்டார்.
‘இவரை அழைத்துச் சென்று ‘லிப்டுக்கு’’அருகில் காத்துக்கொண்டிருங்கள்.வேலை முடிந்ததும் என்னிடம் ஒப்படையுங்கள்’’என்று கூறிவிட்டுச் சென்றார் சிறிபதி சூரியாராச்சி.

பெர்னாண்டஸும்,அளுத்கமகேயும் குமாரியை பாராளுமன்றக் கட்டிடத்தின் அடித்தளத்திற்கு கூட்டிக்கொண்டு சென்று லிப்டின் அருகில் காத்திருக்குமாறு வைத்தனர்.

‘’ஹக்கீம் லிப்டிலிருந்து வரும்போது இந்தக் கடிதத்தைக் கொடுத்து ஜனாதிபதியின் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிடு. நான் கதவருகில் சென்று ஹக்கீம் வந்தால் சைகை காட்டுகிறேன்’’ என்று கூறிவிட்டு அளுத்கமகே சென்றுவிட்டார்.

அனைத்துக் கெமராக்களும் தன்னை நோக்கியே இருக்கின்றன என்பதை அந்த அப்பாவிப்பெண் அறியவில்லை.சிறிது நேரத்தின் பின்னர் ஹக்கீம் பாராளுமன்றக்கட்டிடத்தின் கீழ்தட்டில் இருந்து வெளியே வந்தபோது அவரை நெருங்கி கடிதத்தைக் கையளித்து ஜனாதிபதியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டினார்.நான் இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்கள் அந்தக் காட்சியைத்தான் குறிக்கின்றன.
குமாரியை பாராளுமன்றத்தில் கண்ட ஹக்கீம் வெலவெலத்துப்போனார்.அவர் இதனை எதிர்பார்க்கவே இல்லை.பின்னர் பாராளுமன்றப் பார்வையாளர் கூடத்தில் ஹக்கீம் அவர்களின் இருக்கைக்கு நேரே குமாரி உட்காரவைக்கப்பட்டார்.

அன்றைய(2004.04.22) நிகழ்வுகள் அனைத்தும் ஐ.டீ.என் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.ஹக்கீம் வந்தவுடன் பேர்டினாண்டஸ் குமாரியை முன்னுக்குத் தள்ளுவது,குமாரி ஹக்கீமிடம் கடிதத்தைக் கையளிப்பது,பின்னர் பெர்டினாண்டசுடன் குமாரி செல்வது அனைத்தும் பதிவாகியிருந்தன.நான் இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்கள் அந்த வீடியோவில் இருந்து பெற்றவைகள்தான்.

இங்கு சில விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இதுவரை காலமும் பேசப்பட்டு,எம் மக்களுக்கு நம்பவைக்கப்பட்டு வந்ததைப் போல குமாரி கூரேயின் அத்தியாயம் ஒரு வெற்றுக்கட்டுக்கதையாக இருப்பின்,அரசாங்கத்தினராலும் ரிஷாடின் கூட்டத்தினராலும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதையாக இருப்பின் இவ்வளவு தூரம் ஒரு பெண்ணை நாட்டின் ஜனாதிபதி தனியாகச் சந்திப்பதும்,ஒரு அமைச்சர் கூட்டம் இப்பெண்ணை இயக்குவதும்,பாராளுமன்றம் வரைக்கு கூட்டிச்செல்வதும் சாத்தியமா என்பதை சற்று சிந்திக்கவேண்டும்.

அத்தோடு ஒரு அரசியல் தலைவர் விட்ட தனிப்பட்ட தவறு எவ்வாறு அவரின் அரசியலைக் கட்டுப்படுத்த வருகிறது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அவதானிக்கலாம்.குமாரி கூரே ஹக்கீம் இருவருக்குமிடையிலான தனிப்பட்ட தொடர்பு தனிப்பட்ட தொடர்பாகவே இருந்துவிடுமானால் அது வேறு கதை.ஆனால் அது அவரின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முனைகிறது.அதாவது ஹக்கீம் அவர்களின் கட்டில் விவகாரம் எமது முஸ்லீம் அரசியலைத் தீர்மானிக்க முனைகிறத்.இது அவரின் தனிப்பட்ட விடயம் என்று எவ்வாறு நாம் ஒதுங்கிக்கொள்வது.இதனைப் போல பல முக்கிய அரசியல் நிகழ்வுகளில் ஹக்கீம் எடுத்த தீர்மானங்களுக்கு அவரின் இப்படிப்பட்ட கேவலமான விடயங்கள்தான் காரணமாக இருந்திருக்கிறது என்பதை நான் பின்னர் விபரிப்பேன்.

அரசாங்கம் நினைத்தது நடக்கவில்லை.ஜனாதிபதி வேட்பாளர் ஒரு வாக்கில் தோல்வியடைந்தார். அரசாங்கத்தின் கோபம் ஹக்கீம் மீது பன்மடங்கானது.

தனக்கும் குமாரிக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகள் அரசாங்கத்திற்கு தெரிய வந்துவிட்டது,அது பாராளுமன்றம் வரை வந்துவிட்டது என்பதை அன்றுதான் ஹக்கீம் புரிந்து கொண்டார்.அந்த நான்கு எம்பிகளால்தான் இந்த விவகாரம் வெளியே வந்திருக்க வேண்டும் என்று கணித்துக்கொண்டார்.

இப்போது என்ன செய்வது?

ஒரு முஸ்லிம் சமூகத்தின் தலைவர், அல்குர்ஆனையும்,சுன்னாவையும் யாப்பாகக்கொண்ட கட்சியின் தலைவர்,பிஸ்மில் சொல்லி கூட்டத்தை ஆரம்பிக்கும் தலைவர்,அல்லாஹு அக்பர் என்று உயர்பீட உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தலைவர்,நாரே தக்பீர் சொல்லி மக்களை உணர்ச்சிப்படுத்தும் தலைவர், இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான தலைவர் இன்னொரு பெண்ணோடு இருந்தது வெளியே தெரிந்தால் கட்சி அழிந்துவிடும்,கட்சியின் மானம் கப்பலேறிவிடும்,விடயம் வெளியே சென்றால் தனது அரசியல்,குடும்ப வாழ்க்கை அனைத்தும் வீதிக்கு வந்துவிடும்.

என்ன செய்வது?எத்தனை கோடி கொடுத்தாலும், என்னையாவது செய்து இதனை மூடிமறைத்துவிட வேண்டும்.இல்லாவிட்டால் ஹக்கீம் என்றொரு அத்தியாயம் இலங்கை அரசியலில் அன்றே முடிந்திருக்கும்.யாரிடம் போய் சொல்வது?யாரிடம் உதவி கேட்பது.

இதை முறியடிக்கவல்ல ஒருவரின் முகம் ஹக்கீமுக்கு ஞாபகம் வந்தது.

தலைவர் தொலைபேசியை எடுத்து,தளபதியின் இலக்கத்தை டயல்செய்தார்.
தொடரும்…..

Raazi Muhammadh Jaabir