வளர்ந்த நாடுகளில் ‘அதிகரித்து வரும் ஏழை-பணக்காரர்’ இடைவெளி-ஆய்வறிக்கை!

131210140917_oecd_512x288_afpபெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கு இடையேயான இடைவெளி கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பொருளாதார ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு அமைப்பான-ஓஈசிடி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் இந்த சமத்துவமின்மை பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது என்று கூறியுள்ளது.

அதுமட்டுமன்றி அந்த இடைவெளியானது சமூகச் சூழலுக்கு பங்கம் விளைவித்து, நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிட வழி வகுத்துவிடும் எனவும் அந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஓஈசிடியில் உறுப்பினர்களாக உள்ள 34 நாடுகளில் இருக்கும் 10 சதவீத செல்வந்தர்களின் வருமானம், அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் 10 சதவீத மக்களின் வருமானத்தைவிட பத்து மடங்கு அதிகமாகவுள்ளது என்று அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.

தமது உறுப்பு நாடுகளில் கல்வி, பயிற்சி ஆகியவற்றில் கூடுதலான முதலீடுகள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பு, வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அதிலும் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் கொள்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஓஈசிடி வலியுறுத்தியுள்ளது