வாசுதேவ நாணயக்கார; ரணில் மீது ஆவேசம் !

vஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வாசுதேவ நாணயக்கார பிரதமர் ரணில் விக்கிரசிங்க மீது கடுமையான கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தார்.

ஆவேசமடைந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி “நீ யார் என்னை அமரச்சொல்வதற்கு?” ” நீயா சபாநாயகர்?” ” நீ சபாநாயகர் இல்லை ஒழுங்குப் பிரச்சினையின் நிமித்தமே எழுந்துள்ளேன் பைத்தியக்காரன்” என்று கூறியவாறு கெட்டவார்த்தை ஒன்றையும் மீண்டும் மீண்டும் கூறி நீ உட்காரு ஓய் என்றும் கூறினார்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி இவ்வாறு கெட்டவார்த்தைகளால் பிரதமரை திட்டியபோது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மேசையில் தட்டியும் சத்தம் எழுப்பியும் சிரித்தனர். 
இதன்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் வாசுதேவ எம்.பியைக்கட்டுப்படுத்தாது அமைதியாக இருந்த அதேவேளை கலரியில் பாடசாலை மாணவர்கள்  இருப்பதாக மட்டும் சுட்டிக்காட்டினார்