முட்டை அவித்து உண்
முழுக்கோழி வறுத்து உண்
கெட்ட சீனி உணவு
கிட்டவும் எடுக்காதே.
மாச்சத்து விலக்கு
மாட்டிறைச்சி உண்
கூச்சத்தை விட்டு
குடும்பத்துடன் நட.
எண்ணை என்ன என்று
எண்ணிப்பார்த்து எடு
தென்னையின் எண்ணை மட்டும்
தேவையாயின் எடு.
யாதும் உணவே
யாவரும் உண்பீரென
கோதுமையை விதம் விதமாய்
கொறித்ததை நிறுத்து.
அவரே சொன்னாலும்
அவரை உண்ணாதே
தவறான உணவுகளை
தவறியும் எடுக்காதே.
பட்டர் டீ குடி
பட்டினி கிடக்காதே
பட்ட பின் தவிப்பதிலும்
படுமுன் தவிர்த்தல் நன்று
கொழுப்பு எதிரி என
அளப்பியது போதும்
விழிப்புடன் செயற்படு
களிப்புடன் வாழ்.