அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம்:SAITAM தலைவர்

அஷ்ரப் ஏ சமத்

மருத்துவ பட்டதாரிகளை தரத்தை உறுதிபடுத்தும் வகையில் அரசாங்கம் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்க தயாரகவுள்ளோம் என சைட்டம் தலைவர்  டொக்டர்  நெவில் பர்ணான்டோ ஊடக மாநாட்டில் தெரிவித்தார் . 
 
அவர்  மேலும் தகவல் தருகையில் –
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பட்டதாரிகளுக்கும் உரிமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உயர்கல்வி அமைச்சும். மற்றும் பல்கழைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றில் பரிந்துறைகள் முன்நெடுக்கப்படுவது என்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம்.  இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் சட்டக் கட்டமைப்பு ஆகிய SAITAM முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதுடன் எமது மாணவர்கள் அனைவருக்கும் மேன்முறையீட்டு தீர்ப்பில் சொல்லபட்ட சமவாய்ப்பு வழங்குவதற்கு வழிவகுக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சைட்டம் தலைவர்  டொக்டர்  நெவில் பெர்ணான்டோ தெரிவித்தார் .