இங்கிலாந்து ராணியாக 2-வது எலிசபெத் பதவி வகித்து வருகிறார். இவர் 1952-ம் ஆண்டு பட்டத்து ராணி ஆக முடிசூட்டப்பட்டார்.
தற்போது 90 வயது ஆகும் நிலையில் ராணி ஆக முடிசூடி 65 ஆண்டுகளை தொட்டுள்ளார். இதன் மூலம் உலகிலேயே அதிக நாள் ராணி ஆக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதை கவுரவிக்கும் வகையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் உருவம் பொறித்த நாணயமும், 5 பவுண்டு மதிப்புள்ள தபால் தலையும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பக்கிங்காம் அரண்மனை அருகேயுள்ள கிரீன் பார்க்கில் 41 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசர் குடும்ப குதிரைப் படையின் அணி வகுப்பு நடத்தப்பட்டது. லண்டன் டவரில் 62 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.