நாட்டில் தற்போது இருக்கும் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசினால் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று ஜானாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த பேச்சுவார்த்தையில் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முக்கிய சில உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சந்திப்பில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், எதிர்கால அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.