நோட்டன்பிரிட்ஜில் ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் 20 ஏக்கர் காட்டுப் பகுதி எரிந்து சாம்பல்

க.கிஷாந்தன்

 

 நோட்டன்பிரிட்ஜ் மற்றும் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் காட்டுப்பகுதியில் 04.02.2014 அன்று மதியம் ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 20ற்கும் மேற்பட்ட ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுற்றுப்புற பகுதியில் பைனஸ் காட்டுப்பகுதியும் மானாபுல் காட்டுப்பகுதியில் இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளது.

சில விஷமிகளால் இக்காட்டுப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடும் காற்றும், கடும் வெயிலும் நிலவுவதனால் தீ வேகமாக பரவி வருகின்றது. எனவே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தீ காரணமாக மரஞ்செடிகள் உயிரினங்கள் ஆகியன அழிந்து போகின்றதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

நீரேந்தும் பிரதேசங்களில் இவ்வாறு தீ பரவுவதனால் நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைவடைய வாய்ப்பு காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.