அமைச்சர் ஹக்கீம் தனது பிழையை உணர்ந்து அமைச்சர் றிஷாதிடம் மன்னிப்பு கோர வேண்டும்

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

 

 அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேரடியாகவே அமைச்சர் றிஷாதை மிகக் கேவலாமாக முறையில் எள்ளி நகையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்ட அதிர்வு நிகழ்விலும் அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்தியிருந்தார் (அதிர்வு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததை அமைச்சர் ஹக்கீம் நிரூபிக்க முடியாமல் திணறியமை குறிப்பிடத்தக்கது).இதனைத் தொடர்ந்து மு.காவின் ஆதரவாளர்களும் இதனை வைத்து அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாற்றங்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதனை பார்க்கும் போது “வல்லவன் தண்டனை வழங்காவிட்டாலும் வாசப்படியாவது தண்டனை வழங்கும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.அமைச்சர் ஹக்கீம் தனது பிழையை உணர்ந்து அமைச்சர் றிஷாதிடம் மன்னிப்பு கோர வேண்டும்.அவர்களது ஆதரவாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்.இச் சந்தர்ப்பத்திலாவது இவர்கள் தங்களது பிழைகளை உணர்ந்து கொள்ள முடியாது போனால் எப்போதும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

தற்போது இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து அமைச்சர் ரிஷாதாலும் அமைச்சர் ஹக்கீமை அவமானப்படுத்த  முடியும்.அவரோ இப்படி ஒரு நிகழ்வு நடக்கின்றதா என்று தான் அறியாதவர் போல அதனை கணக்கெடுக்காமல் சென்று கொண்டிருக்கின்றார்.அது தான் அவரது பண்பு.தற்போது மு.காவின் முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமை பஷீர் கேவலப்படுத்தியதை ஒருவரது மானத்தை விற்று அரசியல் பிழைப்பு நடாத்துவதாக கூறுகின்றனர்.இவர்கள் அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாதின் மானத்தை (போலியான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து) விற்று அரசியல் பிழைப்பு நடாத்திய போது எங்கிருந்தார்கள்? மு.கா தவிசாளர் பஷீரின் செயற்பாடு அமைச்சர் ஹக்கீமின் அண்மைக் கால முன் மாதிரிகளில் ஒன்று தான்.உங்களுக்கு வந்தால் இரத்தம்,மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?