தேர்தல் உறுதிமொழிக்கேற்ப இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது:ஊடகத்துறை அமைச்சர்

இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிக்கேற்ப இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.

இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.  கடந்த ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.