சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாட்டு மக்கள் அனை­வரும் தேசியக் கொடியை காட்­சிப்­ப­டுத்­து­மாறு அர­சாங்கம் வேண்டுகோள்..

இலங்­கையின் 69 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாட்டு மக்கள் அனை­வரும் தேசியக் கொடியை வீடு­க­ளிலும் வாக­னங்­க­ளிலும் காரி­யா­ல­யங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­து­மாறு அர­சாங்கம் கோரி­யுள்­ளது.

இது தொடர்பில் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் 69 ஆவது சுதந்­திர தினம் இம்­முறை காலி முகத்­தி­டலில் வெகு விமர்­சை­யாகக் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. ‘தேசிய ஒற்­றுமை’ என்ற தொனிப்­பொ­ருளில் இம்­முறை சுதந்­திரத் தினம் கொண்­டா­டு­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து 69 ஆவது சுதந்­திரத் தினத்தை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதியில் வாக­னங்­க­ளிலும்,வீடு­க­ளிலும் ,காரி­யா­ல­யங்­க­ளிலும் தேசியக் கொடியை காட்­சிப்­ப­டுத்­து­மாறு நாட்டு மக்களிடம் தயவுடன் வேண்டுகின்றோம் என அமைச்சு கோரியுள்ளது.