அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு.
இந்நிலையில், டிரம்ப் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, “ட்ரம்ப் இவ்வளவு காலம் வேறு உலகில் வசித்துவிட்டு இப்போதுதான் அரசியல் உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார். ஆனால், அவர் ஆபத்தான வரவாகத்தான் இருக்கிறார். டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவை மட்டும் தான் பாதிக்கும். மற்ற நாடுகள் நல்ல நிலையில் தான் இருக்கும்.
ஈரான் மக்களின் மத்தியில், அமெரிக்க அரசின் நிர்வாகம் டிரம்ப் நடவடிக்கைகளால் நேர்மையற்றதாக மாறிவிட்டது. அதனால் தான் அமெரிக்கர்களுக்கு ஈரானில் தடை விதிக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.