ஜப்பான் அரசாங்கத்தின் அதியுயர் விருதான ”உதய சூரியன்” கௌரவ விருது சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது

அஷ்ரப் ஏ சமத்

ஜப்பான் அரசாங்கத்தினால் சர்வசேத உறவுகள் கலாசார மேம்பாடு நலனோம்பல் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகள் ஊடாக உலகிற்கு உன்னதமான சேவையை  நல்கியவர்களை பாராட்டுமுகமாக வழங்கப்படுகின்ற  அதியுயர் விருதான ” உதய சூரியன்”  கௌரவ விருதினை சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்கப்பட்டது.  

இலங்கை பாராளுமன்ற சபாநயாகர், ஜப்பான் இலங்கை நட்புரவுச் சங்கத்தின் ஆலோசகர்,  இரன்டு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையில் இராஜதந்திர தலைமை வகித்த வீதமும் பராட்டத்தக்கது. 
இந் நிகழ்வு ஜப்பான் பேரரசர் மாளிகையில் அக்கிஹிதோ பேரரரால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் தனது இளைய புதல்வி மறைவு காரணமாக கரு ஜயசுரிய அவர்களால் அவ் வைபவத்தில் பங்கேற்க  இயலவில்லை. எனவே இந் நிகழ்வு 2017.01.31ஆம் திகதி  கொழும்பில் உள்ள ஜப்பான் துாதரகத்தில் நடத்தப்பட்ட விசேட வைபவத்தில் வைத்து ஜப்பான் துாதுவரினால்  இந்த விருது சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கி வைக்ப்பட்டது.