கல்முனை அல் ஹாதி இஸ்லாமிய அரபுக் கல்லூரி ஊர் உலமாக்களால் திட்டமிடப்பட்டு அதற்காக தனியான ஓர் நிருவாகமும் அமைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புனித ரமழான் மாதத்தோடு அல்லாஹ்வின் உதவியோடு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.
எமது முழு நேர வதிவிட வசதியுடனான மதரஸா இவ் ஆண்டில் கிதாபு பிரிவிற்கான அனுமதிக்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருகின்றது.
தகமைகள்
- விண்ணப்பிக்கும் போது மாணவன் 14வயது பூர்த்தியாகியிருத்தல்.
- பூரண உடலாரோக்கியமுடையவராக இருத்தல்.
- நன்னடத்தையும் நல்லொழுக்கமும் உடையவராக இருத்தல்.
- புனித குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்திருத்தல்.
- வேறு எந்த மதரஸாவிலும் ஓதாதவராயிருத்தல்.
குறிப்பு : O/L பரீட்சையை பூர்த்தி செய்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
மதரஸாவின் நோக்கம்:
புனித அல் குர்ஆனையும் சங்கையான ஹதீஸ்களையும் முற்று முழுதாக தன் வாழ்வில் எடுத்து நடப்பதோடு முழு உம்மத்திலும் உயிர்பிக்க உழைத்து முயற்சிக்கக் கூடிய மார்க்க அறிவில் ஆழமான ஹக்கான ஆலிம்களை உம்மத்தில் தயார் படுத்துவது.
கல்வி வசதிகள்
மார்க்க கல்வியை ஆழமாக போதிப்பதோடு அரபு, உருது, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக்கூடிய மொழி வழம் வழங்கப்படும்.
கணிதம், விஞ்ஞானம், வானியல், புவியியல் போன்ற பாடசாலை கலைகள் வாழ்க்கையின் தேவையளவு போதிக்கப்படும்.
(அரசாங்க பரீட்சைகளில் தோற்ற மதரஸாவினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்படமாட்டாது சுயமாக ஏற்பாடு செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.)
பட்டம் பெற்று வெளியேற முன் மார்க்கத்திற்குட்பட்ட தொழில் பயிற்சியும் வழிகாட்டலும் வழங்கப்படும்.
குறிப்பு:
குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்களே நேர் முகப்பரீட்சையின் மூலம்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
புதிய மாணவர் அனுமதிக்கான நேர் முகப்பரீட்சை எதிர்வரும் ஞாயிறு(24.05.2015) காலை 09.00 மணிக்கு கல்முனை டவுன் ஜூம்ஆ பள்ளி மேல் மாடியில் நடைபெறும்.
இதுவரை விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்காதவர்களும் பிறப்பு பதிவு மேலும் பாடசாலையில் இறுதியாக பெற்ற மாணவர் அடைவு அறிக்கையுடன் சமூகமளிக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
As Sheikh Mowlavi
K.L. Ziyanudeen (Hashimi)
077-3462823 /0777 113177
As Sheikh Mowlavi
Irfath (Rashadhi)
077 9350742