அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள செயலாணைக்கு மேலும் கடும் எதிர்ப்பு

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விளையாட்டு நிறுவனமான நைக்கி, உலகிலுள்ள எல்லோருமே போற்றுகின்ற பன்முகத்தன்மையின் செல்வாக்கு , அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறது. 

அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் 10 ஆயிரம் அகதிகளை பணிக்கு அமர்த்த போவதாக சங்கிலி தொடர் காஃபி கடைகளை நடத்திவரும் ஸ்டார்பக்ஸ் உறுதி அளித்திருக்கிறது. 

இந்த ஆண்டின் இறுதியில், பிரிட்டனில் பயணம் மேற்கொள்ளும் அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தி தயாரிக்கப்பட்டுள்ள மனு ஒன்றில், பிரிட்டனில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். 

அமெரிக்காவின் வால் ஸ்டீரீட்டில் முதலீடு செய்வோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை பிரிவின் தலைவர் ஃபெடரிக்கா மோக்ஹெரினா கூறியிருக்கிறார். 

இராக்கில் அமெரிக்கர்கள் நுழைய இராக் நாடாளுமன்றம் தடை கோரியுள்ளது. 

அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் சிரியா அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதற்கான தடை, போர் மண்டலங்களில் சிக்கியிருக்கும் மக்களை அங்கேயே அகப்பட்டிருக்க செய்யும் என்பதால், பொது மக்களின் வாழ்க்கையை ஆபத்திற்கு உள்ளாக்கும் என்று மருத்துவ அறக்கட்டளையான எம்.எஸ்.எப் தெரிவித்திருக்கிறது.

 

BBC