உருளைக்கிழங்கு மற்றும் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்கு வகை உணவு பொருட்கள் மற்றும் ரொட்டியை அதிக வெப்பத்தில், நீண்ட நேரம் வறுத்து சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு சாப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு அலாதி பிரியம் உள்ளது. அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது. அதனால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மக்கள் வறுத்த உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் சிப்ஸ் வகைகளை தங்களது பாரம்பரிய உணவாக பயன்படுத்துகின்றனர்.
அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் வறுத்த உணவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். அது குறித்து உணவு தர நிர்ணய நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், பொன்நிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளனர்.
கருஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் ரசாயன பொருளின் அளவு அதிகரிக்கிறது. இதன்மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.
எனவே அதிவெப்பத்தில் நீண்ட நேரம் பொரித்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.