நாட்டில் பலம் பகிரப்படுவதை விட இதன் மூலம் ரணில் தலைமையிலான தனி நபரது பலத்தினை பெற்று கொள்வதற்கு முன்னெடுப்புகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயகார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாரான ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்கு எதிராக செயற்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியை அவமதிக்கும் விடயமாகவே அதிஸ்ட இலாபசீட்டு விடயத்தில் நிதியமைச்சரின் செயற்பாட்டை கருதுவதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அதிஸ்ட இலாபசீட்டு விலையை குறைக்க ஆலோசனை கூறும்போது நிதியமைச்சர் 30 ரூபாவில் இருந்து 20 குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர் காலத்தில் மக்கள் நிலை என்ன நடக்கும் என சந்தேகம் ஏற்ப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் கோப் அறிக்கை விவாதத்தினை திசை திருப்பும் வகையிலான ரணிலின் திட்டமே பாலித தேரரின் செய்துள்ள முறைப்பாடு என பகிரங்கமாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயகார சுட்டிக்காட்டியுள்ளார்.