காத்தான்குடி பொது மைதானத்தை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் …!

[t;gh;fhd;

கடந்த 4 வருடங்களாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூடப்பட்டு 120 இலட்சம் ரூபாய்க்கு மேல் அரசாங்கத்தினுடைய பொதுப்பணத்தினை செலவு செய்து செப்பணிடப்பட்ட காத்தான்குடி பொது மைதானத்தினை கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினுடைய பொதுக் கூட்டத்தினை நடாத்துவதற்கு மேடை அமைக்கின்றோம் என்ற பேரில் கனரக வாகனங்களை தாறுமாறாக செப்பணிடப்பட்ட மைதானத்தினுள் ஓடி, மைதானத்தை சேதப்படுத்தி மேடும் பள்ளமுமாக மாற்றி பாவனைக்குதவாத நிலைக்கு மாற்றி, ஆங்காங்கே குழிகளும், பள்ளங்களுமாக இருப்பதனால் விளையாட்டு வீரர்கள் உபாதைக்குள்ளாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது. 

இவ்வாறு பொதுப்பணத்தினை செலவு செய்தது மட்டுமல்லாமல், பாவனைக்குதவாமல் இந்த பொது மைதானத்தினை மாற்றியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதே நேரத்தில் இதனை சீர்செய்து தருமாறு விளையாட்டு கழகங்கள் கேட்டதற்கு இணங்க இன்று (20.05.2015) புதன்கிழமை இப் பொது மைதானம் பார்வையிடப்பட்டு இதனை சீர் செய்வதற்குரிய மதிப்பீட்டினை மேற்கொள்ளுமாறு கோரி காத்தான்குடி நகரசபைக்கு ஓர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டை பெறுவதனூடாக முதலமைச்சரின் அனுமதியினை பெற்று இதனை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுப்பணங்கள் இவ்வாறு வீணடிக்கப்படுகின்ற ஓர் அரசியல் கலாச்சாரத்தினை துடைத்தெறிந்து மக்களுடைய பணத்தின் பெறுமதியினை உணர்ந்து செயற்பட வேண்டியது நம்மீது கடமையாகவுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்..

Unknown