அபிவிருத்தியின் முதலாவது கட்டமாக வறட்சியை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘பேண்தகு அபிவிருத்தியின் குறிக்கோள்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம் – 2017 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வறுமையை இல்லாதொழிப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
‘ வலிமைமிகு இலங்கையை நோக்கிய அரசின் பொருளாதார திட்டங்கள் குறித்து அறிவூட்டுவதற்கும் வறட்சி நிலைமைகளின்போதான சவால்களை வெற்றிகொள்வதற்கு விவசாயத் துறையினை தயார்செய்வதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்களின் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களை நீக்கி வறுமையை இல்லாதொழித்து அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துதல் அரசின் நோக்கமாகும்.
அந்தக் குறிக்கோளினை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.