நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை பாடசாலை பாடவிதானத்தில் உள்ளடக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யோசனை தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான சமுக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறோம் என்பது தொடர்பில் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் பாடசாலை பாடவிதானத்தில் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியம் என்பவற்றை உள்ளடக்க கல்வித் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பில் தமது தலைமையில் இயங்கும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க அலுவலகம், கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.