எதிர்கால ஹாபிழ்களுக்கும், மௌலவிகளுக்கும் உதவுங்கள் !!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ.
.
மத்ரசா மாணவர்களுக்கு அல் குர்ஆன் வழங்கல்.
.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மக்கள் தங்கள் குடும்பத்தை ஆன்மீகத்தின் பால் வழிநடாத்த வேண்டும் என்று தூய நோக்கத்தில் தமது மக்களையும் ஹாபிழாக மௌலவியாக ஆக்க வேண்டும் என்று மார்க்கக் கல்விக்கு உரிமை கொடுத்து வருகின்றனர்.
.
ஆனபோதிலும் அத்தகைய பின்தங்கிய சில பகுதிகளில் குர்ஆன் வாங்க வசதியில்லாத சூழல் காணப்படுகின்றது.
கிண்ணியாவில் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 500 பேரளவிலான மாணவர்களுக்கு குர்ஆன்கள் தேவைப்படுவதாக அறியக்கிடைத்திருக்கின்றது
.
நாம் அதற்கான முயற்சிகளை வட்சப்களிலும் தனிநபர்களை அணுகி கேட்டதன் அடிப்படையிலும் சுமார் 150 குர்ஆன்களுக்கான பணத்தொகையை சேகரித்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
.
அவர்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சு குர்ஆன் பிரதியொன்றுக்கு ரூபாய் 700 செலவாகிறது.

நிச்சயமாக இஹ்லாசோடு செய்யப்படும் சதகாவுக்கு மகத்தான நன்மைகள் இறைவனிடத்தில் இருக்கின்றன. மாத்திரமல்லாமல் அந்த ஏழை மாணவர்கள் உச்சரிக்கின்ற குர்ஆன் ஆயத்துக்களுக்கும் அவர்கள் மார்க்கத்துக்காக செலவழிக்கும் கால நேரங்களுக்கும் நாமும் ஒரு காரணம் என்ற அடிப்படையில் அதன் நன்மையின் பங்கு நமக்கும் கிடைக்காதா.. நிச்சயமாக கிடைக்கும்..
.
அவர்கள் ஹாபிழ்களாக மௌலவிகளாக வெளியாகி அவர்கள் மூலம் பரவுகின்ற இஸ்லாமிய சந்ததிகளுக்கும் சமுகத்துக்கும் நாமும் ஒருவகையில் காரணம் என்றிருக்கும் போது அதன் நன்மையின் பங்கு மறுமை வரை வந்து கொண்டேயிருக்கும் அல்லவா..
.
உங்களால் முடியும் என்றிருந்தால் பின்வருபவர்களை தொடர்பு கொள்ளுங்கள். 
.
அல்லது பணம் தராமல் அவர்கள் கேட்கும் அதே அச்சு வடிவமைப்பு குர்ஆனை வாங்கி நானே கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று விரும்புவர்களும் இருப்பார்கள்
அவர்களும் தொடர்பு கொள்ளலாம்..

Sri Lanka –
Rasad Ahamed. +94771990872

Qatar – 
Ahameth Ashraf +97450334245
Mohamed Hafrath +97470635235
.
Bank Account Details : 

Royal Youths
8172006600
Commercial Bank
Akkaraipattu Branch
.
பணத்தொகை ஒரு வேளை கூடுதலாக வரும் பட்சத்தில் நிச்சயம் இலங்கையில் எங்கெல்லாம் குர்ஆன்களுக்கான தேவை இருக்கிறதோ அங்கே வழங்கப்படும் என்பதையும் குர்ஆன்களுக்கு மாத்திரமே இந்த பணத்தொகை செலவழிக்கப்படும் என்பதையும் நினைவுறுத்துகிறோம்