இலங்கையில் காணப்படும் முதலீட்டுக்கான வர்த்தக வாய்ப்புக்கள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை வருமாறு சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் உரையாற்றிய போதே சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
உலகின் பாரியளவிலான நான்கு சந்தைகளுக்கு இலங்கையின் உற்பத்திகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளதாகவும், இதுதொடர்பில் கவனம் செலுத்துமாறும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பிரதமர் ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெறுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.