பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி தொடர்பாக கட்­சி­யினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை:ஹசன் அலி

எனக்குத்  தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி எப்­போது வழங்­கப்­படும் என கட்­சி­யினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆனால்  கடந்த 16 ஆம் திகதி  இதற்­கான சகல ஏற்­பா­டு­களும் பூர்த்தி செய்­யப்­படும் என கட்­சியின்  தலைவர் என்­னிடம் தெரி­வித்­தி­ருந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார். 

தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார்.  

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள கட்­சியின் பேராளர் மாநாட்டின் போது எனக்கு தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஊட­கங்கள் வாயி­லா­கவே அறிந்­து­கொண்டேன். ஆனால் இது­வரை  அது தொடர்­பாக எனக்கு  அறி­விக்­கப்­ப­ட­வில்லை. 

செய­லாளர்  நாயகம் ஹசன் அலிக்கு தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கப்­பட வேண்­டு­மென்றால் ஸ்ரீலங்கா  முஸ்லிம்  காங்­கி­ரஸின் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச். எம்.சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும். பாரா­ளு­மன்ற செய­லா­ளரைத் தொடர்பு கொண்டு வினவிய போது சல்மான் எம்.பி.இதுவரை தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை எனத் தெரிவித்தார்

விடிவெள்ளி