கனியவளத்தையும் அதனை சார்ந்த உற்பத்திகளையும் ஈரானிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு இலங்கை தொடர்ந்தும் ஆவலுடன் இருப்பதாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் டெஹரானில் மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் சரீப்பை நேற்று சந்தித்து இந்த விடயங்களை கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் நீண்டகால நல்லுறவு நிலவுவதாக ஈரான் அமைச்சர் குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் நற்புறவை விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.