வித்தியா கூட்டுப்பாலியல் படுகொலை -யாழில் போர்க்களம்!

safபுங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியலில் ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் அல்லது தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி யாழில் மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சுவிஸ் நபர் மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற போது அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டு நீதிமன்ற வளாகம் போர்க்களமானது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைமீறி சென்று நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன் மக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் வாகனங்கள், நீதிமன்ற கட்டிட தொகுதி என்பன சேதமடைந்துள்ளன. 

அத்துடன் பொலிசார் இருவரும் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி பொலிசார் தடியடி நடத்தியபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் நீதிமன்ற வளாகமே போர்க்களமானது.