மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படும் என தெரியவருகிறது.
அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளூராட்சி சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைத்து வருவது உறுதியாகியுள்ளதாகவும் எல்லை நிர்ணய அறிக்கை தாமதப்படுத்துமாறு அமைச்சர் கூறியுள்ளதாகவும் எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸ் பகிரங்கமாக கூறியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.