பொது பல சேனாவின் கடி­தம் தொடர்பாக ஜம்­இய்­யதுல் உலமா சபைக்கு ஸ்ரீ லங்­­கா தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்!

அல்­குர்­ஆனில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் தொடர்பில் தெளிவு­களை வழங்­கு­மாறு கோரி அண்­மையில் பொது பல சேனா அமைப்பு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்­தது. அக் கடி­தத்­துக்கு உலமா சபை பதி­ல­ளிக்க வேண்டும் எனக் கோரியும் அது தொடர்­பாக உலமா சபையை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த நேரம் தரு­மாறு கோரியும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உலமா சபைக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்­துள்­ளது.

 

 அமைப்பின்  பொதுச் செய­லாளர் ஆர். அப்துர் ராசிக் ஒப்­ப­மிட்டு உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்­திக்கு அனுப்பி வைத்­துள்ள இக் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நாட்டில் இன­வாதம் மீண்டும் தலை­யெ­டுத்­துள்ள இந்­நி­லையில் கடந்த 18.11.2016 திக­தி­யி­டப்­பட்டு பொது பல சேனா அமைப்­பி­லி­ருந்து அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு ஒரு கடிதம் அனுப்பப் பட்­டி­ருந்­தது. குறித்த கடிதம் ஊட­கங்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்டு சமூக வலை தளங்­க­ளிலும் பரப்­பப்­பட்­டது. பொது பல சேனா­வினால் உலமா சபைக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்த குறித்த கடி­தத்தில் புனித திரு­மறைக் குர்­ஆனில் இடம் பெற்­றுள்ள சில முக்­கிய வச­னங்­க­ளுக்கு விளக்கம் கோரப்­பட்­டி­ருந்­த­துடன் சில நபி மொழி­க­ளுக்கும் விளக்கம் தரும்­படி கோரி­யி­ருந்­தார்கள்.

பொது பல சேனாவின் கடி­தத்­திற்கு கட்­டாயம் முறை­யான பதி­ல­ளிக்க வேண்டும்

ஏக இறைவன் மூலம் மனித குலத்­திற்கு வழி­காட்­டி­யாக அனுப்­பப்­பட்ட இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்­க­ளுக்கு இறை­வ­னிடம் இருந்து வஹி மூலம் அறி­விக்­கப்­பட்ட புனித குர்ஆன் தொடர்பில் உலகில் அனைத்து பகு­தி­க­ளிலும் கேள்­விகள் எழுப்பப் படு­கின்­றன, விமர்­ச­னங்­களும் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. அவை அனைத்­துக்கும் அவ்­வப்­போது இஸ்­லா­மிய அறி­ஞர்கள் பதி­ல­ளித்து வரு­கி­றார்கள்.
இலங்­கை­யிலும் கடந்த சில வரு­டங்­க­ளாக குர்ஆன் தொடர்­பிலும், நபி­ய­வர்கள் தொடர்­பா­கவும், இஸ்­லாத்தை கடு­மை­யான முறையில் விமர்­சனம் செய்தும் மாற்று மத நண்­பர்­க­ளினால் கேள்­விகள் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்­றுக்கு நாம் பதி­ல­ளிக்­காத நிலையில் “எமது கேள்­வி­க­ளுக்கு இஸ்­லாத்தில் பதி­லில்லை” இஸ்லாம் பயங்­க­ர­வாத மார்க்கம் என்ற தோற்­றப்­பாட்டை சாதா­ரண பௌத்த மக்கள் மத்­தியில் உண்­டாக்கி விடும். ஆகவே மாற்று மதத்­த­வர்கள் இஸ்லாம் தொடர்பில் முன் வைக்கும் கேள்­வி­க­ளுக்கு அழ­கிய பதில்­களை வழங்க வேண்­டி­யது எமது கட­மை­யாக உள்­ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாடு முழு­வதும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற தலைப்பில் சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களின் மாற்று மத நண்­பர்­களை அழைத்து இஸ்லாம் பற்றி அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அர்த்­த­முள்ள சந்­தே­கங்­க­ளுக்கு குர்ஆன் மற்றும் நபி­ய­வர்­களின் வழி­காட்டல் மூலம் அர்த்­த­முள்ள பதில்­களை மாற்று மத நண்­பர்கள் திருப்­திப்­படும் வகையில் வழங்கி வரு­கிறோம். நாட­லா­விய ரீதியில் மாற்று மத மக்கள் மத்­தியில் இந்­நி­கழ்ச்சி பெரும் வர­வேற்பைப் பெற்று வரு­கி­றது.

அந்த வகையில் தற்­பொது பொது பல சேனா அமைப்பு சார்பில் உலமா சபைக்கு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் புனித குர்­ஆனின் வச­னங்­க­ளுக்­கான விளக்­கங்கள் கோரப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கு உரிய முறையில் பதி­ல­ளிப்­பது இலங்கை வாழ் இஸ்­லா­மிய சமு­தா­யத்தின் கடப்­பா­டாக உள்­ளது.இது­வரை காலமும் இன­வா­தத்தை மாத்­தி­ரமே நம்­பி­யி­ருந்த பொது பல சேனா அமைப்­பினர் தற்­போது கேள்வி கேட்டு பதில்­களை பெற்றுக் கொள்ள முனை­கி­றது என்ற வகையில் அவர்­களின் கடி­தத்தை புறக்­க­ணிக்­காமல் கட்­டாயம் பதி­ல­ளிக்க வேண்டும்.

கடிதம் தெளி­வில்லை என்­பது முறை­யான பதில் அல்ல

பொது பல சேனா­வினால் ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு கடிதம் அனுப்­பப்­பட்ட செய்தி சமூக ஊட­கங்­களில் பரப்­பட்ட நேரத்தில் “குறித்த கடி­தத்­திற்கு நாம் பதி­ல­ளிப்போம்” என்று ஜம்­மிய்­யாவின் செய­லாளர் குறிப்­பிட்­ட­தாக செய்­திகள் இணை­ய­தள செய்தி ஊட­கங்­களில் பார்க்கக் கிடைத்­தது.

இதே நேரம் கடந்த 30.11.2016 அன்­றைய விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் “பொது பல சேனாவின் கடிதம் யாருக்­கு­றி­யது என்று தெளி­வு­ப­டுத்­தப்­ப­டாமல் அனுப்­பப்­பட்­டுள்­ளது. தலை­வ­ருக்கா?, செய­லா­ள­ருக்கா? என்ற விபரம் அதில் இல்லை. ஆகவே அது தொடர்பில் நாம் பொது பல சேனா­விடம் விளக்கம் கோர இருக்­கிறோம்.” என்ற கருத்­துப்­பட ஜம்­மிய்­யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் அளித்த விளக்கம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

ஒரு கடி­தத்தை பொறுத்த வரையில் அது எந்த அமைப்­புக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனுப்­பப்­பட்­டதோ அந்த அமைப்பு குறித்த கடி­தத்­திற்கு பதில் வழங்க வேண்டும். தலை­வ­ருக்கா? செய­லா­ள­ருக்கா? என்­றில்லா விட்­டாலும் ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு என்று தெளி­வாக கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் போது அது உங்கள் அமைப்பின் காரி­யா­ல­யத்­திற்கே கிடைக்கப் பெற்­றி­ருக்கும் போது “கடிதம் தெளி­வில்லை விளக்கம் கோர இருக்­கிறோம்” என்­கிற பதில் பொருத்­த­மற்­ற­தாகும்.

கடி­தத்தில் கேட்க்­கப்­பட்­டுள்ள கேள்­வி­களில் தெளி­வின்மை இருப்பின் அது தொடர்பில் விளக்கம் கோர வேண்டும். தெளி­வில்­லாத கேள்­விக்கு முறை­யான பதில் அளிக்க முடி­யாது என்­ப­தினால் விளக்கம் கோரு­வது கட்­டா­ய­மாகி விடும். ஆனால் பொது பல சேனா­வினால் தற்­போது ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு அனுப்பப் பட்­டுள்ள கடி­தத்தை பொறுத்த வரையில் அதில் கேள்­வி­களில் தெளி­வில்­லாமல் இருக்­கி­றது என்று ஜம்­மிய்யா எங்கும் சொல்ல வில்லை. தலை­வ­ருக்கா? செய­லா­ள­ருக்கா? என்று குறிப்­பிட வில்லை என்று தான் உலமா சபையின் தலைவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

தலை­வ­ருக்கா? செய­லா­ள­ருக்கா? என்று குறிப்­பிட வேண்­டிய அவ­சியம் இல்லை. ஜம்­மிய்­யதுல் உல­மா­வுக்கு என்று தெளி­வாக குறிப்­பிட்­டுள்­ளார்கள். அத்­துடன் குறித்த கடிதம் உங்­க­ளுக்கு கிடைத்­து­மி­ருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கையில் அதற்கு பதி­ல­ளிக்­காமல் இருக்கும் வித­மான கார­னங்­களை ஊட­கங்­க­ளுக்கு தெரி­விப்­பது உரிய பதி­லாக இருக்­காது.

பொது பல சேனா­வினால் அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் புனித அல்-­குர்ஆன் மற்றும் நபி­மொ­ழிகள் தொடர்பில் விளக்கம் கோரப்­பட்­டுள்­ளது. குறித்த கடிதம் உலமா சபைக்கு முக­வ­ரி­யிட்டு அனுப்­பப்­பட்­டாலும் அதன் உள்­ள­டக்கம் முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் தொடர்­பா­ன­தாகும். அதற்கு பதி­ல­ளிப்­பது ஜம்­மிய்­யாவின் மட்­டு­மல்ல அனைத்து முஸ்­லிம்­க­ளி­னதும் கட்­டாயக் கட­மை­யாகும்.

இதே நேரம், குறித்த கடி­தத்தில் பொது பல சேனாவின் தரப்­பி­லி­ருந்து கேட்க்­கப்­பட்­டுள்ள கேள்­விகள் பதி­ல­ளிக்க முடி­யாத கேள்­வி­க­ளு­மல்ல. முறை­யா­கவும் தெளி­வா­கவும் பதி­ல­ளிக்க முடி­யு­மான சாதா­ரண கேள்­விகள் தான்.மாத்­தி­ர­மன்றி, தற்­போது ஜம்­மிய்­யதுல் உலமா சபை­யிடம் பொது பல சேனா­வினால் கேட்க்­கப்­பட்­டுள்ள கேள்­வி­க­ளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொழும்பு சுக­த­தாச உள்­ள­ரங்­கத்தில் நாம் வெளி­யிட்ட அல்-­குர்ஆன் சிங்­கள மொழி பெயர்ப்­பி­லேயே பதில்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்­பதும் மேல­திக தக­வ­லாகும். மாற்று மத நண்­பர்கள் குர்­ஆனில் இருந்து எழுப்பும் சந்­தே­கங்­க­ளுக்கு உரிய பதில்­களை ஏற்­க­னவே நாங்கள் வெளி­யிட்ட குர்ஆன் சிங்­கள மொழி­யாக்­கத்தில் தெளி­வாக விளக்­கி­யி­ருக்­கிறோம்.

பொது பல சேனாவின் கடி­தத்­திற்கு உரிய பதிலை வழங்­கு­வ­தற்கு குர்ஆன் மற்றும் நபி­ய­வர்­களின் வழி­காட்டல் படி முழு­மை­யான அறிவு ரீதி­யி­லான மற்றும் மொழி ரீதி­யி­லான அனைத்து வித­மான ஒத்­து­ழைப்­பு­க­ளையும் ஜம்­மிய்­யதுல் உல­மா­வுக்கு தரு­வ­தற்கு தவ்ஹீத் ஜமாஅத் தயா­ரா­க­வுள்­ளது.

(கட்­டாயம்) தலைவர் உள்­ளிட்ட நிர்­வாக சபை­யி­னரை நேரில் சந்­திக்க விரும்­பு­கிறோம்

ஆகவே, குறித்த கடிதம் தொடர்பில் ஜம்­மிய்­யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, செய­லாளர் முபாரக் மதனி உள்­ளிட்ட தலைமை நிர்­வாக சபை­யி­னரை நேரில் சந்­திந்து கலந்­து­ரை­யாடல் நடத்த தவ்ஹீத் ஜமாஅத் விரும்­பு­கி­றது.இக்­க­லந்­து­ரை­யாடல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் செய­லாளர் முபாரக் மதனி உள்­ளிட்­ட­வர்கள் கட்­டாயம் பங்­கு­பெற வேண்டும் என்­ப­துடன் வேறு நபர்­களை வைத்து பேசு­வ­தி­னூ­டாக முறை­யான ஒரு காரி­யத்தை பிர­யோ­ஜனம் அற்­ற­தாக ஆக்கி விட வேண்டாம் என்றும் அன்பாய் வேண்டிக் கொள்­கிறோம். 

கடி­தத்­திற்கு பதி­ல­ளிக்­காமல் புறக்­க­ணிப்­ப­தையே பதி­லாக்க வேண்டாம்

ஏற்­க­னவே பல தட­வைகள் சமு­தாயப் பிரச்­சி­னைகள் தொடர்பில் உலமா சபையின் தலைவர் உள்­ளிட்ட நிர்­வாக சபை­யி­னரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் சந்­திக்க முயற்­சித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடிதம் அனுப்­பிய போதும் உலமா சபை­யினர் எம்மை சந்­திக்க நேரம் ஒதுக்க வில்லை. கடிதம் மூலம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அணு­கிய போதெல்லாம் பெரும்­பாலும் தலைவர் நாட்டில் இல்லை என்­கிற ஒரு பதில் எமக்கு வாய் வார்த்­தை­யாக தரப்­பட்­டது. தலைவர் வந்­த­வுடன் தொடர்பு கொள்வோம் என்று கூறப்­பட்­டது. ஆனால் இது­வரை ஒரு முறை கூட எமது கடி­தங்­க­ளுக்கு பதில் அளிக்­கப்­ப­டவும் இல்லை. சந்­திக்க நேரம் தரப்­ப­டவும் இல்லை என்­பதை இங்கு தெளி­வாக குறிப்­பிட விரும்­பு­கிறோம்.

இஸ்­லாத்தின் அடிப்­படை கொள்கை விஷ­யத்தில் தனித்­து­வ­மாக இஸ்­லாத்தை அதன் தூய வடிவில் எவ்­வித விட்டுக் கொடுப்­பு­மில்­லாமல் பிரச்­சாரம் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத், சமு­தாயப் பிரச்­சி­னை­களில் மற்ற அமைப்­பி­ன­ருடன் இணைந்து செயல்­ப­டு­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கி­றது. ஆனால் எம்மை வேண்­டு­மென்றே புரக்­க­ணித்து விட்டு “தவ்ஹீத் ஜமா­அத்­தினர் சமு­தாயப் பிரச்­சி­னை­களில் இணைந்து செயல்­ப­டு­வ­தில்லை” என்று குற்றம் சாட்­டு­வது ஏற்றுக் கொள்ள முடி­யாத ஒன்­றாகும்.

இறு­தி­யாக கடந்த 09.11.2016 அன்று ஜம்­மிய்­யதுல் உலமா சபை, தேசிய சூரா சபை, முஸ்லிம் கவுன்ஸில் உள்­ளிட்ட “முஸ்லிம் அமைப்­பு­களின் கூட்­ட­மைப்பு” உறுப்­பி­னர்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்­வா­கத்­துடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஷிராஸ் நூர்தீன் தலை­மையில் அவ­ரு­டைய வீட்டில் ஒரு சந்­திப்பை நடத்­தி­னார்கள். குறித்த சந்­திப்பில் சமு­தாயப் பிரச்­சி­னை­களில் தவ்ஹீத் ஜமாஅத் மற்ற அமைப்­பி­ன­ருடன் இணைந்து செயல்­பட தயா­ராக இருந்தும் ஜம்­மிய்­யதுல் உலமா சபை­யி­னரால் தெளி­வாக புரக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பது ஏக மன­தாக ஒப்புக் கொள்­ளப்­பட்­டது.

அதன் பின்­னரும் கூட இனிமேல் சமு­தாயப் பிரச்­சி­னை­களில் தவ்ஹீத் ஜமா­அத்தை இணைத்து செயல்­ப­டு­வது என்றும், தவ்ஹீத் ்தை இணைத்து செயல்படுவது என்றும், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடுவது இல்லை என்றும் தெளிவாக முடிவெடுத்து விட்டு 11.11.2016 அன்று எடுத்த முடிவுக்கு மாற்றமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இணைந்து செயல்படுவதற்கான இறுதி வாயிலையும் மூடியது ஜம்மிய்யதுல் உலமா உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் தான் என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.

குறிப்பு: நாம் பல முறை ஜம்மிய்யதுல் உலமா சபையை சந்திக்க உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் முயற்சித்தும் எமக்கு எவ்வித பதில்களும் உலமா சபை சார்பில் தரப்பட வில்லை. இந்த கடிதத்தையும் வழமை போல் பதிலளிக்காத கடிதமாக மாற்றி விட வேண்டாம். இதற்கு இன்றிலிருந்து (22.10.2016) எதிர்வரும் 02.01.2017 ம் திகதிக்கு முன் சுமார் 10 நாட்களுக்குள் உத்தியோகபூர்வமாக உரிய பதிலை எமக்கு அனுப்பி வைக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம் என்றும் அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டு­ள்­ள­து.