முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலியின் அதிகாரக்குறைப்பு விவகாரத்தில் கிழக்கின் எழுச்சி ஆரம்பம் தொட்டு இன்றுவரை ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
அவரிடமிருந்து வஞ்சகமாய் பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் நிபந்தனையின்றி திருப்பி கொடுக்கப்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருக்கின்றோம்.
அவ்வாறே அட்டாளைச்சேனைக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினரையும் கொடுக்கவேண்டும் என்பதே கிழக்கின் எழுச்சியின் தீர்க்கமான நிலைப்பாடாகும்.
தேசியப் பட்டியல் உறுப்பினராய் ஹசன் அலி அவர்கள் நியமிக்கப்படுவதில் கிழக்கின் எழுச்சி ஆர்வம் காட்டவில்லை
ஆனால் கிழக்குக்கு சொந்தமான தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்கு சல்மானைவிட முஸ்லிம் தேசியத்தின் சுய நிரணய உரிமையை பெற்றுக்கொள்ள பங்களிப்புச் செய்யக்கூடியவரான ஹசன் அலி மிகப்பொருத்தமானவர் என்பது கிழக்கின் எழுச்சியின் நிலைப்பாடாகும்
-தலைமைத்துவ சபை-
கிழக்கின் எழுச்சி