பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் நீளம் 3,350 மீட்டா் அகலம் 45 மீட்டா் ஓடுபாதைகள் மேலதிகமாக நிர்மாணத்திற்காக ஜனவரி -6ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலான 3 மாதங்களுக்கு மு.ப 08.30 – பி.பகல் 04.30 மணிவரை மூடப்படும். என போக்குவரத்து சிவில் போக்குவரத்துச சேவைகள் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தாா்.
இன்று(22) ஊடகவியலாளா்களை விமான நிலையத்திற்கும் ஓடுபாதை வேலைத்தளத்திற்கும் அழைத்துச் சென்று அங்கு சீனக்கம்பனி ஊடாக நிர்மாணிக்கப்படுத்த உள்ள மேலதிக ஓடுபாதைகள், வேலைத்தளங்கள் பற்றி ஊடகவியலாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் அமைச்சா் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சா் அசோக் அபேசிங்க, தலைமையில் ஊடகவியலாளா் மாநாடொன்றும் நடைபெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா-
சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் இந்த ஆண்டு மட்டுமே இலங்கை விமான நிலையத்தின் ஓடுபாதை தரம் பற்றி சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த விமான நிலையத்தில் 360 ஆசனங்களைக் கொண்டதொரு விமாணத்தினை தரையிரக்க முடியாது. 1986ல் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதையே இங்கு உள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசு ஓடுபாதைகளை திருத்தியமைக்கவில்லை. விமானநிலையத்திற்கு வருபவா்கள் 5 மணித்தியாலயத்திற்கு முன்பே விமானநிலையத்திற்கு வரல் வேண்டும். சில விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் இருந்து செயற்படுத்தப்படும். சில விமானங்கள் இங்கு ஆசனங்கள் நிரப்பட்டு மத்தலையில் இரண்டு மணித்தியாலயங்கள் தரித்து நிற்கப்படும். விமான நிலையத்திற்கு வருபவா்கள் தமது வாகணங்கள், மற்றும் வழியனுப்ப வருபவா்கள் மட்டுப்படுத்தப்படும்.
3,350 மீட்டா் அகலம் 45 மீட்டா் ஓடுபாதைகள் மேலதிகமாக நிர்மாணத்திற்காக சீன கம்பனியின் உள்ளுா் தொழிலாளிகள் 350 பேர் பயன்படுத்தப்படவுள்ளனா். இதற்கான கலவைகள் உள்ளுராிலும் சீனாவிலும் பெற்றுக் கொள்ளப்படுகின்றனா். இத்திட்டத்திற்காக 7.2 பில்லியன் ருபா நிதி செலவழிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் நாளாந்தம் வருகை தருபவா்கள் விமானம் பி.ப 02.00 – 07.00 வழியனுப்பபுவா்கள் 14.00 – 19.00 பி.ப மட்டுமே அனுமதிக்கப்படும். வழியனுப்ப வருபவா்களுடன் உள் செல்ல ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படும். மினுவான்கொடை பொலிஸ் விமான நிலையத்திற்கு வரும் வாகாணங்களை விமான நிலையத்திற்கு வெளியில் நிறுத்துவதற்கு உரிய போக்குவரத்து வழிமுறைகளையும் செய்துள்ளது.
இந்த மூன்று மாதத்திற்குள் ஸ்ரீலங்கா விமானம் 16 விமான போக்கவரததையும் சர்வதேச விமனங்கள் 4 கையும் இடை நிறுத்தியுள்ளது. தற்பொழுது ஒரு நாளைக்கு 170 விமானங்கள் இலங்கைக்கு வருதல் செல்லுதல் செயற்படுத்தப்படுகின்றன. இதில் ஸ்ரீலங்கா விமானம் 75 விமானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஒரு நாளைக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 25 ஆயிரம் போ் வந்து, போகின்றனா். 300 மெற்றிக் தொன் கொள்கலன்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மத்தளை விமான நிலையம், ரத்மலான விமான நிலையங்கள் பயன்படுத்தப்படும். இதற்காக பிரயாணிகளுக்கு 3 மாத காலத்திற்கு அசௌகரியங்கள் ஏற்படும். இருந்தும் சர்வதேச விமான கம்பணிகள் எமது நாட்டி விமான நிலையத்தின் ஓடு பாதைகள் திருத்துமாறு கடந்த 10 வருடங்களாக இலங்கை விமான அதிகார சபைக்கு தெரிவித்துள்ளது. ஒரு பிரயாணிக்காக அமேரிக்க டொலா் 50 கிடைக்கப்பெருகின்றது. அதில் 35 டொலரை திரைசேரிக்கும் 5 டொலா் சுற்றுலாத்துறைக்கும் மிகுதி 10 டொலரே தங்களுக்கு கிடைக்கின்றது. மாதாந்தம் 30 மில்லியன் ருபா வருமானம் பெறுகின்றது. இங்கு தொழில் செய்யும் ஊழியருக்கு இம்முறை 42 ஆயிரம் ருபா போனஸ் வழங்க்பபடுகின்றது. அதனை அவா்கள் 75ஆயிரம் ருபா கேட்கின்றனா. 35 டொலரை திரைசேரி பெற்றுக் கொள்வதானல் இவ்வளது தொகை போனஸ் வழங்க முடியாது எனவும் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தாா்
மத்தள விமான நிலையத்திற்கு உரிய கடுகதி பாதை வசதிகள் இல்லை. அத்துடன் அங்கு தங்கி நிற்பதற்கும் ஹோட்டல்களும் இல்லை. இருந்தும் சில விமானங்களையும் அங்கும் செயல்படுத்த உள்ளோம் அத்துடன் விசா முறைகளை நடைமுறைப்படுத்த போதிய அதிகாரிகள் அத் திணைக்களத்தில் இல்லை. அத்துடன் மேலதிக சுங்க அதிகாரிகளும் ஆளனியும் இல்லை என கூறப்பட்டுள்ளது. அதற்காக ஓய்வு நிலை அதிகாரிகளை மீள ஒப்பந்த அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பணிக்கு அமா்த்தி பிரயாணிகளை உடனடியாக அவா்களது விமான பிரச்சினைகளை தீா்க்குமாறும் அந்தந்த அமைச்சின் செயலாளருகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் எனவும் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா அங்கு தெரிவித்தாா்.