சாய்ந்தமருக்கு தனியான உள்ளுராட்சி சபை உடன் உருவாக்கப்பட வேண்டும் – அஸ்வான் சக்காப் மௌலானா சூளுரை!

 

-எம்.வை.அமீர் –

அம்பாரை மாவட்டத்தில் கல்முனை தொகுதியை பிரபல்யப்படுத்தும். கூடிய வாக்காளர் கொண்ட ஓர் கிராமம் சாய்ந்தமருது.

பல ஆண்டு காலமாக பிரதேச செயலகமாக இயங்கி வரும் இந்த சாய்ந்தமருது உடனடியாக பிரதேச சபையாக மாற வேண்டும். இவ்வாறு கூறுகிறார். ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் அஸ்வான் சக்காப் மௌலானா.

அம்பாறை மாவட்டத்தில் சிறிய வாக்காளர் தொகை கொண்ட கிராமங்களான நாவிதன்வெளி, இறக்காமம், காரைதீவு போள்றவை பிரதேச சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கூடிய வாக்காளர் கொண்ட பிரதேச சாய்ந்தமருது. சுமார் 19.000வாக்காளர்கள் உள்ளனர். இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எட்டப்படாத நிலையில் உள்ளன.

அரசியல் போட்டா போட்டிகளாலும் ஒரு சில தீய சக்திகளாலும் இவை மளுங்கடிக்கப்பட்டு வருகின்றன.

தனி முஸ்லீம்கள் வாழும் பிரதேசமான சாய்ந்தமருது உடன் உள்ளுராட்சி சபையாக மாற வேண்டும்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அவர்களுக்கும் ஐ.தே.கட்சி செயலாளர் அமைச்சர் கபீர்ஹாசிம் அவர்களுக்கும் இது சம்மந்தமான மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். எதுவித பதிலும் இதுவரை எட்டப்படவில்லை. ஆகவே இனியும் பொறுமை காக்க முடியாது. இன்று சாய்ந்தமருது மக்கள் மிகவும் ஆத்திரத்தோடும் ஆவேஷத்தோடும் உள்ளனர். மக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நின்று அனைத்து அரசியல் தலைவர்களும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் புத்தி ஜீவிகளும்,உலமாக்களும், சமூக நற்பணி மன்றங்களும் கூட்டாக ஒன்றினைந்து உடனடியாக சாய்ந்தருதுக்கான உள்ளுராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு சூளுரைத்தார். ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளரும் மருதம் கலைக்கூடல் மன்ற தலைவரும் அஸ்வான் சக்காப் மௌலானா.

asvan_Fotor