உள்ளூராட்சி தேர்தல்கள் அடுத்த வருட முதல் பகுதியில் நடைபெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கூட்டம் நேற்று இடம்பெற்றபோது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தின்போது உள்ளூராட்சி சபைத்தேர்தல், தற்போதைய பொருளாதார நிலை என்பன தொடர்பாகவும் பேசப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான அறிக்கை, எல்லை மீள்நிர்ணயக்குழுவினால் எதிர்வரும் 27ஆம் திகதியன்று உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் வர்த்தமானிப்படுத்தப்பட்ட பின்னர் தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்பில் அறிவிக்கப்படும் என்று குழுவின் தலைவரான அசோக பீரிஷ் தெரிவித்துள்ளார்.