துருக்கித் துப்பாக்கி


Mohamed Nizous

அலப்போவில் நடந்த
அராஜக தாக்குதலின்
இழப்பைத் தாங்க முடியா
இளைஞனின் ஆவேசம்.

கடுமாயான முறையில்
கண்டித்தது ஐ நா.
இளசுகள் துடித்த போது
எங்கே போனது இந்த நைனா?

சிறகைப் பிடுங்கினால்
சில் வண்டே சீறும்
உறவையே பிடுங்கினால்
உட்கார்ந்து இருப்பாரா?

வல்லரசு கொன்றால்
வாய் திறக்க ஆளில்லை.
எல்லோரும் சீறுவார்
எளியவர் மீறினால்.

துப்பாக்கித் தாக்குதலை
தப்பென்று உரைப்போர்
அப்பாவிச் சிறுவர்களை
அழித்ததில் மெளனம் ஏன்?

ஷரியா நிலைப் படி
சரியா எனத் தெரியவில்லை.
‘சிரியா’ கொலைப்  படி – இது
சரியாகவும் கூடும்.

வன்முறையை ஆதரித்து
வார்த்தைகளைக் கொட்டவில்லை
எரிவதைப் பிடுங்காமல்
கொதிப்பது குறையாது.