அலெப்போ ,இறுதி நேர போர் நிறுத்த முயற்சிகளும் தோல்வி : 80 ஆயிரம் பேர் உயிராபத்தில்

சிரியாவில் போராளிகள் வசமுள்ள மிகப் பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள தாக்குதல் நடவடிக்கைகளால் நூற்றுக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கு அலெப்போ நகரம் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அத்துடன் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற முடியாதவாறு சுமார் 80 ஆயிரம் மக்கள் ஆபத்தை எதிர்நோக்கி யுள்ளதாகவும் சிரிய அதிபர் அஸாதுக்கு ஆதரவான இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள்  சுட்டிக்காட்டியுள்ளன. 

இந் நிலையில் துருக்கியின் மத்தியஸ்த த்தில் எட்டப்பட்ட போர் நிறுத்தமும் நேற்று மாலை முறிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிரி­யாவில் கடந்த 5 வரு­டங்­க­ளாக அந்­நாட்டு அதிபர் பஷர் அல் அஸாத் தலை­மை­யி­லான ஆட்­சியைக் கவிழ்க்கும் நோக்கில் பல்­வேறு ஆயுதக் குழுக்கள் போராடி வரு­கின்­றன.

இந் நிலையில் அலெப்போ நகரை போராளிக் குழுக்கள் தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தன. எனினும் இந் நகரை மீட்­ப­தற்­கான தாக்­கு­தலை ரஷ்யா மற்றும் ஈரானின் உத­வி­யுடன் சிரிய இரா­ணுவம் சில தினங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­பித்து அதில் வெற்­றியும் கண்­டது.

இந் நிலையில் அங்­கி­ருந்து பொது மக்கள் பாது­காப்­பாக வெளியேற முற்­பட்ட போது அஸாத் தரப்பு சிரிய இரா­ணு­வத்­தினர் கடும் தாக்­குதல் நடத்­தினர்.

இதனால் கடந்த திங்கட் கிழமை மாத்­திரம் 13 சிறு­வர்­களும் 11 பெண்­களும் உட்­பட 82 பொது மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

பொது மக்­களை வீடு­க­ளுக்­குள்ளும் கட்­டி­டங்­க­ளுக்­குள்ளும் அடைத்­து­விட்டு படை­யினர் துப்­பாக்­கி­களால் சுட்­ட­தா­கவும் அக் கட்­டி­டங்­களை அழிக்கும் வகையில் குண்­டு­களை வீசி­ய­தா­கவும் சம்­ப­வத்தை நேரில் கண்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

”நாங்கள் உயி­ருக்குப் போராடிக் கொண்­டி­ருக்­கிறோம். இதுவே எம்­மி­ட­மி­ருந்து வரும் இறுதி தக­வ­லாக இருக்­கலாம்” என அலெப்­போவில் சிக்­கி­யுள்ள மக்­களில் பலர் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டுள்­ளனர்.

”நான் கொல்­லப்­ப­டலாம். அல்­லது சிறைப்­பி­டிக்­கப்­ப­டலாம். அதற்­காக அஞ்­ச­வில்லை. ஆனால் இந்த அசாத் ஆத­ரவு படை­யி­னரின் மனி­தா­பி­மா­ன­மற்ற அட்­டூ­ழி­யங்­களை உல­குக்குச் சொல்­லி­விட்டு மர­ணிக்­கவே ஆசைப்­ப­டு­கிறேன்” என அலெப்­போவில் சிக்­கி­யி­ருக்கும் லினா அல் ஷாமி எனும் பெண் சமூக ஊடக செயற்­பாட்­டாளர் அல்­ஜெ­ஸீரா தொலைக்­காட்­சிக்கு ‘ஸ்கைப்’ வழி­யாக தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை அலெப்­போவில் பாரிய மனிதப் பேர­ழிவு நடந்து கொண்­டி­ருக்­கையில் ஐ.நா. உட்­பட உலக நாடுகள் அம் மக்­களை பாது­காக்க எந்­த­வித முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை என சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன.

இதற்­கி­டையில் துருக்­கியின் தலை­யீட்டில் ரஷ்யா தலை­மை­யி­லான இரா­ணுவக் கூட்­ட­ணிக்கும் போரா­ளிகள் தரப்­பு­க­ளுக்­கு­மி­டையில் புதன் கிழமை அதி­காலை எட்­டப்­பட்ட போர் நிறுத்த உடன்­ப­டிக்கை நேற்று மாலை முறி­வ­டைந்­துள்­ள­தா­கவும் மீண்டும் கடும் தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

 கிழக்கு அலெப்­போ­வினுள் சிக்­கி­யுள்ள சுமார் 80 ஆயிரம் மக்­களை பாது­காப்­பாக வெளி­யேற்றும் நோக்­கி­லேயே இந்த போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை சிரியாவின் அலெப்போவில் கடும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள முஸ்லிம்களுக்காக தொடராக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு உலக முஸ்லிம்களிடம் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

நன்றி – விடிவெள்ளி