தேர்தல் ஆணையாளரினால் வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்துக்கு முந்திய தினமான இன்று கூட்டப்படவுள்ள உயர்பீட கூட்டத்தில் தன்னுடைய ஆணவ மடத்தனத்தை விட்டெறிந்து நீதி நியாயமான தீர்வொன்றை எய்துவதிலிருந்தும் வழமைபோல் ஹகீம் தவறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆயினும் புதிதாக எவரையும் செயலாளராய் நியமிகிக்கும் அதிகாரம் உயர் பீடத்துக்கும் இல்லை.
தலைவர்,செயளாலர்,தவிசாளர் போன்ற நியமனங்கள் பேராளர் மாநாட்டிலேயே நடைபெற வேண்டும்.
என்றாலும், எவரையும் இடைநிறுத்தி ஒழுங்காற்று நடவடிக்கை என்ற பேரில் பழிவாங்கும் கேவலமான நடவடிக்கைக்கு உயர்பீடத்தை பயன்படுத்த பதவி வெறிபிடித்த ஹகீம் முனையமாட்டார் என்று கூறமுடியாது.
மு.காவின் ஆரம்ப போராளிகளாகவும் கிழக்கின் அடையாளங்களாகவும் இருக்கும் எவர்மீதாயினும் ஹக்கீம் கைவைப்பாராயின் கிழக்கின் புழுதியைக்கூட மிதிப்பதற்கு ஹகீம் அனுமதிக்கப்படமாட்டார் என்பதை சத்தியத்துக்கு துணை நிற்கும் ஏகனான அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகின்றோம்.
பேனைகள் மட்டுமல்ல
ஆயுதங்களும் ஆகுமாக்கப்பட்டவையே
இனிமேல் மு.காவின் அனைத்து நடவடிக்கைகளும் புதிய தலைமைத்துவ சபையொன்றாலேயே மேற்கொள்ள்ப்படவேண்டும்.
ஹகீம் உடனடியாக கட்சியைவிட்டும் வெளியேற வேண்டும்
-தலைமைத்துவ சபை-
கிழக்கின் எழுச்சி