நேற்று நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து கொண்ட பின்னர் அவர் மீதான பல பகிரங்க குற்றச்சாட்டுகளை அந்த கட்சியின் செயலாளராக இருந்த வை.எல்.எஸ். ஹமீட் என்பவரால் சுமத்தப்பட்ட விடயத்தை முகநூலில், வை.எல்.எஸ் ஹமீட் வெளியீட்ட விடயத்தை நாம் அறிவோம்.
நடுநிலையான, எந்த அரசியல் அடிப்படைகளிலும் சிக்குண்டு போகாத குறித்த அமைச்சரை பற்றிய சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு நிமிடம் எம்மை நிறுத்தி வைத்தது.
இங்கு குறித்த வை எல் எஸ் ஹமீட் அமைச்சர் ரிசாட் பதியுதீனை சாடிய விடயங்களில் ஊடகவியலாளர்களுக்கு பணம் கொடுத்து எழுத வைக்கின்றார் என்கின்ற விடயமும் எனக்கு முன் அவர் விவாதிக்க வருவாரா? என்கின்ற கேள்வியும் வை.எல்.எஸ் ஹமீட் அவர்களால் ஒரு போதும் எடுத்துரைக்க முடியாத விடயங்கள்
ரிசாட் பதியுதீன் என்பரை சரி காண வேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல மாறாக வை. எல். எஸ் தனது அறிவீனத்தை வெளிக்காட்டுகின்ற விதம் வேடிக்கையானது.
பூமுதீன் என்பவர் ஒரு ஊடகவியலாளர் அவர் அண்மையில் மு. கா தலைவருடைய சகோதருடைய பா உறுப்புரிமை தொடர்பில் தனது ஆக்கமொன்றை எழுதி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் அந்த ஆக்கம் எழுதியதற்காக ரிசாட் அவரை கடிந்து கொண்டதாக ஒரு செய்தி இருக்கிறது.
தனக்கு நெருக்கமான தான் விசுவாசிக்கின்ற கட்சிசார் அரசியல் ஊடகவியலாளர்கள் கட்சி தலைமைக்கு விசுவாசமாக நடந்து கொள்ள முயல்வதும் பின்னர் அவர்கள் அபிமானத்தைப் பெற முனைவதும் இயல்பானவை.
அதற்க்காக அந்த ஊடகவியலாளர் மீதான குற்றச்சாட்டை கட்சி தலைமை மீது சாட்டுவது பொருத்தமானதா? அது அரசியல் ஒழுங்கா? அல்லது பல வருட அரசியல் புலமையாளராக தன்னை இனம் காட்டும் வை. எல். எஸ் சாட்ட கூடிய பெருமதியான குற்றச்சாட்டா? என முடிவுகளை அவரே எடுத்துக் கொளளட்டும்.
இரண்டாவது, ரிசாட் பதியூதினை விவாதற்க்கு அழைக்கின்ற அந்த கட்சியின் செயலாளர் அமைச்சர் சமுகத்திற்கு செய்த தீமைகள் அல்லது இன்னோரன்ன விடயங்களை பேச விளைகின்ற போது அவரால் சமுகத்திற்க்கு கிடைக்க பெற்றதான நன்மைகளையும் வை.எல்.எஸ் ஸால் சமுகத்திற்க்கு கிடைத்த நன்மைகள் பலன்கள் தொடர்பிலும் பேச வேண்டும்
வை. எல். எஸ் .ஆல் அவை தொடர்பில் பேச முடியுமா?
அமைச்சரவை அமைச்சராக மக்கள் அதிகாரத்தை வழங்கிய ஒருவரால் கட்சியினுடைய தலைவராக இருந்து ஆற்றுகின்ற பணி தொடர்பில் வெறுமனே தேசிய பட்டியல் கிடைக்கவில்லை என்பதற்காக வம்புக்கிழுக்கின்ற செயற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது
காத்திரமான முன்மாதிரியான அரசியலை இணைவு பிரிவு இரு வேளைகளிலும் கொண்டு செல்ல பக்குவப்பட்ட அரசியல் செய்ய வை எல் எஸ் முயல வேண்டும்.