ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை போராட்டம் நடத்தியவர்களிடமிருந்து அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தில் நேற்று போராட்டமொன்று நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது துறைமுகத்தின் சொத்துக்களுக்கும், நங்கூரமிட்டிருந்த கப்பல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட நட்டத்தை போராட்டம் நடத்திய தரப்பினரிடமிருந்து அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போராட்டம் நடத்திய ஊழியர்களின் தொழில் குறித்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.