உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கவுள்ளதாக எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனவே அவ்வறிக்கைகிணங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முழு நாடும் 4 ஆயிரத்து 833 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் அத்தொகுதிகளூடாக 5 ஆயிரத்து 92 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள அசோக பீரிஸ் தலைமையிலான குழு தனது பணிகளை நிறைவுசெய்து விரைவில் அதன் இறுதியறிக்கையை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிம் கைளிக்கவுள்ளது. எனினும் அரசாங்கம் அவ்வறிக்கைக்கு இணங்க தேர்தலை நடத்தாது குறித்த அறிக்கையினை அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்கு அனுப்பவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்டசியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அளகப் பெரும குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையினை அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்காக அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அசோக பீரிஸ் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சட்டத்ரணி மிஸ்பா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய மெத்திவ், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும உள்ளடங்கலாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கே அரசாங்கம் அவ்வறிக்கையினை கட்சிகளின் பரிசீலனை்க்கு அனுப்புவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.