அமெரிக்காவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் வீரர் ஜான் கிலன் மரணம் !

அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன். 95 வயதான இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே கொலம்பசில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

201612091236081222_john-glenn-first-american-to-orbit-the-earth-dies-at-95_secvpf

இவர் கடந்த 1962-ம் ஆண்டு விண்வெளிக்கு சென்றார். இவர் விண்வெளிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட முதல் வீரர் ஆவார்.

விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய அவர் 1974-ம் ஆண்டில் அமெரிக்க செனட் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விண்வெளி சென்று திரும்பிய 36 ஆண்டுகளுக்கு பிறகு 1998-ம்ஆண்டு மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வயது 77. இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற மிக வயதான வீரர் என்ற பெருமை பெற்றார்.