சீனாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்!

screen-shot-2015-07-21-at-1-27-51-pmஅமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சீனா கரனஸி மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டுவதாகவும், அமெரிக்க வேலைவாய்ப்புக்களைப் பறிப்பதாகவும், தென் சீனக் கடலில் ராணுவ தளத்தை ஏற்படுத்தி தனது ராணுவ பலத்தைக் காட்ட முயல்வதாகவும் ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பல தசாப்தங்களாக கடைபிடிக்கப்பட்ட அமெரிக்க ராஜதந்திர கொள்கைகளில் இருந்து விலகி, தைவான் அதிபருடன் டிரம்ப் தொலைப்பேசியில் உரையாடியதையடுத்து, சீனா கோபமடைந்த நிலையில் டிரம்பின் இந்த விமர்சனம் வந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, டிரம்ப் பதவியேற்புக்கான நடைமுறைகளைக் கவனிக்கும் அணி, வெளிநாட்டு தலைவர்களுடன் பேசுவதற்கு முன் வெளியுறவுத்துறையுடன் ஆலோசிக்க வலியுறுத்தியிருந்தார்.