சீனாவின் அதிகம் விலையான இராணுவபோக்குவரத்து விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது!

ranil wickremesinghe_2521383f

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின்கீழ் சீனாவின் அதிகம் விலையான இராணுவபோக்குவரத்து விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது. 

ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் செய்தித்தாளிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

சீன விமானங்களை பொறுத்தவரையில் வலுவானவை. எனவே அந்த நாட்டிடம் இருந்து மேலும் இரண்டுவிமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே பாகிஸ்தானிடம் இருந்தும் இந்தியாவிடம் இருந்தும் இலங்கை, போர் விமானங்களைகொள்வனவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்தநிலையில் சீனாவின் இராணுவ விமானங்களின் மூலம் சுற்றுலாத்துறையினரைஏற்றியிருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே அவற்றை கொள்வனவு செய்யவுள்ளதாக பிரதமர்தெரிவித்துள்ளார்.