–ஊடகப்பிரிவு
சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாகபிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்குசெவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்குஉள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர்முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனைமாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனைஅண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்திற்கும்எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு வந்திடாத வகையில்கருமங்களை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டினார். குறிப்பாக மருதமுனைக்கென தனியான சபையொன்றையும்கல்முனையில் தமிழ் மக்கள் அதிகமாக வாழுமிடங்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கான ஒரு சபையொன்றினையும்உருவாக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள் விடுத்தார்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் குழுநிலைவிவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்மேலும் கூறியதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைஅதிகளவு சனத்தொகையையும் பரப்பளவையும் கொண்டசபையாகும். எனவே அந்தப் பிரதேச சபையைபுதுக்குடியிருப்புப் பிரதேச சபை, ஒட்டுச்சுட்டான் பிரதேச சபைஎன இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளைஏற்படுத்திதருமாறும் வேண்டினார்.
அதே போன்று மன்னாரில் பெரிய நிலப்பரப்பைக் கொண்டமாந்தை மேற்கு சபையைப் பிரித்து அங்கு இன்னுமொருபிரதேச சபையாக மடுப்பிரதேச சபையை உருவக்குமாறும், முசலிப் பிரதேச சபையின் எல்லையில் இருக்கும்மறிச்சுக்கட்டியை பிரதேச சபையாக உருவாக்க நடவடிக்கைஎடுக்குமாறும் சிலாவத்துறையையும் அவை சார்ந்துள்ளஇடங்களையும் உள்ளடக்கி சிலாவத்துறை நகரசபையாகவும்பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
திருமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபை, சாம்பூர், தோப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பெரிய பிரதேசசபையாகும். எனவே அங்கு தமிழ் மக்களுக்கென தனியான ஒருசபையையும் தோப்பூர் மக்களுக்கு ஒரு பிரதேசசபையும்யையும் மூதூரை நகர சபையாகவும் ஆக்க வேண்டும்என்றார்.
குச்சவெளி பிரதேச சபையும் பாரிய நிலப்பரப்பைகொண்டதாக உள்ளது. புல்மோட்டையையும் இந்தப் பிரதேசசபை தன்னகத்தே கொண்டுள்ளதால் அதனையும் இரண்டாகப்பிரித்து இரண்டு சபைகளை உருவாக்குமாறு வேண்டுகோள்விடுக்கின்றேன் என்றார்.
அத்துடன் புத்தளம் மன்னார் வவுனியா ஆகிய நகர சபைகளைமாநகரசபையாக பிரகடனப் படுத்துமாறும் சம்மாந்துறைப்பிரதேச சபையை நகர சபையாக மாற்றுமாறும் அமைச்சர்வேண்டிக்கொண்டார்.
அது மாத்திரமன்றி கற்பிட்டி பிரதேச சபையை கற்பிட்டி நகரசபையாக மாற்றி அந்தப்பிரதேசத்திலுள்ள காயாமோட்டையைபிரதேச சபையாக மாற்றுமாறும் கோரினார்.
அமைச்சர் பைசர் முஸ்தபா வடக்குக் கிழக்கில் பாலங்கள்நிர்மாணிப்பதற்கு உதவியமைக்கும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.