தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மற்றும் சபாநாயகர் பொலிஸ் மா அதிபரை சந்திக்கவுள்ளனர்

அமைச்சர் ஒருவருடன் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை சந்திக்கவுள்ளனர்.

இந்த விடயம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ranil pujitha karu

இதேவேளை இந்த வாரத்துக்குள் இந்த சந்திப்பு இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து பொலிஸ் மா அதிபரின் விளக்கத்தை கோரியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தொலைபேசி உரையாடலின் போது ‘ஐயா’ என்று மறுபுறத்தில் உள்ளவரை விழித்த பொலிஸ் மா அதிபர் நிலமே என்பவரை கைதுசெய்யப்போவதில்லை என்று உறுதி வழங்கியிருந்தார்.

இதற்கிடையில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பும், அதில் பேசப்பட்ட விவகாரங்களும் குறித்து கொழும்பு அரசியலில் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.