முன்னிலை சோசலிஸக்கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் அரசியலில் ஈடுபடவுள்ளார்.
சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று விடுவிக்கப்பட்ட அவர், இலங்கையின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கமுடியும் என்று அமைச்சர் எஸ் பி நாவின்ன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவர், அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் குமார் குணரட்ணம் அரசியலில் ஈடுபடவுள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்ணம், கடந்த ஒருவருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.